பொது செய்தி

தமிழ்நாடு

நிலஅளவை கட்டண உயர்வு: திரும்பப்பெற வலியுறுத்தல்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சேலம்: நிலஅளவை கட்டண உயர்வை திரும்பப்பெற, தமிழக அரசுக்கு, விவசாயிகள் வலியுறுத்தினர்.


இதுகுறித்து, சேலம் மாவட்ட விவசாயிகள் சங்கத்தலைவர் ராஜமாணிக்கம், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, நேற்று முன்தினம் அனுப்பிய மனு: தமிழக நிலஅளவைத்துறையில், மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான கட்டணம் உயர்த்தியது கண்டிக்கதக்கது. புஞ்சை நிலங்களை அளந்து, எல்லை நிர்ணயிக்க, 30 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாய், நஞ்சை நிலத்துக்கு, 50 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாய், அதேபோல, மறுஅளவீடு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. தவிர, நில அளவை முன்பணம், 400 சதவீதத்தில் இருந்து, 800 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், மலைப்பிரதேசங்களில் அளவீடு கருவியான கோணமானியை பயன்படுத்தி, எல்லைகளை கண்டுபிடிக்க, 30 ரூபாயில் இருந்து, 300 ரூபாய். பராமரிப்பு நில அளவருக்கு, எதிரான மேல்முறையீடுக்கு, 50ல் இருந்து, 400 ரூபாய் என, அனைத்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் நிலஅளவை கட்டண உயர்வை ரத்து செய்து, அரசாணையை, உடனே திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X