சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருடனுக்கு பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி: தப்பி ஓடிய 7 மணி நேரத்தில் சுற்றிவளைத்த போலீஸ்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஆத்தூர்: பைக் திருடிய வழக்கில் கைதானவருக்கு, தொற்று ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தப்பிய அவரை, ஏழு மணி நேரத்தில் போலீசார் சுற்றிவளைத்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், வீடு, வணிக நிறுவனங்கள் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் அடிக்கடி திருடுபோகின. சம்பந்தப்பட்ட இடங்களில், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, ஒருவரே பைக் திருடியது தெரிந்தது. ஆத்தூர் டி.எஸ்.பி., ராஜூ தலைமையில் தனிப்படை போலீசார், கடந்த, 24ல், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த, 30 வயதுடைய வாலிபரை பிடித்து, இரு மொபட், ஏழு பைக்குகளை பறிமுதல் செய்தனர். அவருக்கு, பரிசோதனை செய்தபோது, 'கொரோனா வைரஸ்' இருப்பது, நேற்று முன்தினம் உறுதியானது. அவரை, ஆத்தூர் அரசு மருத்துவமனையில், போலீசார் அனுமதித்தனர். நேற்று காலை, 7:30 மணிக்கு, அவர் தப்பி ஓடிவிட்டார். மதியம், 2:30 மணிக்கு, பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது தோட்டத்தில் பதுங்கியிருந்தபோது, போலீசார் சுற்றிவளைத்தனர். பின், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் கூறுகையில், 'அவர் மீது, ஆத்தூர், மல்லியக்கரை, ஏத்தாப்பூர், வாழப்பாடி, அம்மாபேட்டை, சேலம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில், வழிப்பறி, பைக் திருட்டு உள்பட, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தோட்டம் இருந்தும், மது அருந்த, பெண்களிடம் நெருக்கமாக இருக்க, பைக் திருடி விற்று, அந்த பணத்தை பயன்படுத்தி வந்தார்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X