தர்மபுரியில் ஒரே நாளில் 130 பேருக்கு தொற்று உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் ஒரே நாளில் 130 பேருக்கு தொற்று உறுதி

Added : ஜூலை 27, 2020
Share
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், மாவட்ட சோதனைச்சாவடிகளில் பணியாற்றுவோர், கண்காணிப்பு பணிகளில் கோட்டை விடுவதால், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து உரிய அனுமதியின்றி வருவோர், தர்மபுரி மாவட்டத்துக்குள் புகுந்து வருகின்றனர். இதனால், கொரோனா பாதிப்பில் பின் தங்கியிருந்த,

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், மாவட்ட சோதனைச்சாவடிகளில் பணியாற்றுவோர், கண்காணிப்பு பணிகளில் கோட்டை விடுவதால், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து உரிய அனுமதியின்றி வருவோர், தர்மபுரி மாவட்டத்துக்குள் புகுந்து வருகின்றனர். இதனால், கொரோனா பாதிப்பில் பின் தங்கியிருந்த, தர்மபுரி மாவட்டம், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில், மாவட்டத்தில், 130 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் அதிகமுள்ள பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் தடுப்புக்களை அமைத்தது. மாவட்டத்தில் கொரோனாவால் ஏற்கனவே, இருவர் பலியான நிலையில் கடந்த, 24ல் கொரோனா தொற்றுடன், தர்மபுரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில், ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த, 55 பெண் அனுமதிக்கப்பட்டார். நேற்று ஏற்பட்ட மூச்சுத்திணறலால் அவர் இறந்தார். இதன் மூலம், மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X