பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க கூடுதல் சிறப்பு அலுவலர் அறிவுறுத்தல்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என, கூடுதல் சிறப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் கூறினார்.


கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் தலைமையில், மூன்றாம் கட்டமாக காணொலிக் காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது: கொரோனா தொற்று உள்ள நபர்களை கண்டறியும் போது, அவர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள், வெளியில் வராதவாறு கண்காணிக்க வேண்டும். தொற்று கண்டறியப்பட்ட இடங்களில், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே, ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து அவர்களுக்கு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடு மற்றும் முகாம்களில் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அதிகளவில் நடத்த வேண்டும். மேலும், அனைத்து பகுதிகளிலும் கிராம அளவிலான குழுக்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று, நோய் அறிகுறிகள் குறித்த தகவல் சேகரிக்கும் பணியை, 100 சதவீதம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், தேசிய தொற்று நோய்யியல் நிறுவன இயக்குனர் மனோஜ் முரேகர், கலெக்டர் பிரபாகர், எஸ்.பி., பண்டி கங்காதர், டி.ஆர்.ஓ., சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X