மேலும் 52 பேருக்கு தொற்று: பாதிப்பு 737ஆக உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 52 பேருக்கு தொற்று: பாதிப்பு 737ஆக உயர்வு

Added : ஜூலை 27, 2020
Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 737ஆக உயர்ந்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மே, 3 வரை மாவட்டத்தில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படாத நிலையில் அதன்பிறகு நாளொன்றுக்கு, 10 பேர் என்ற சராசரியில் கொரோனா பரவியது. ஆனால், இவை தற்போது வேகமாக பரவி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கிருஷ்ணகிரி நகரில், 16 பேரும், கிருஷ்ணகிரியை சுற்றிலும் உள்ள பகுதிகளில், 10 பேரும், பர்கூரில், ஏழு பேரும், காவேரிப்பட்டணம், ஜெகதேவி, குருபரப்பள்ளி, ஜிஞ்சுப்பள்ளி, தளியில் தலா ஒருவரும், ராயக்கோட்டையில், மூன்று பேரும், ஓசூரில், 11 பேரும் என, நேற்று ஒரே நாளில், 52 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 737ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடப்பட்டது. இதே போல், கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் மூன்று பணியாளர்களுக்கு கொரோனா உறுதியானதால், மருத்துவமனை மூடப்பட்டது. கொரோனா வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் மிகவும் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் என, மருத்துவத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X