பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.,க்கள் இருவருக்கு இன்ஸ்., ஆக பதவி உயர்வு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வரும், இரு எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.


கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் கண்ணன், 45. ஓசூர் டவுன், மத்திகிரி உட்பட பல்வேறு ஸ்டேஷனில் பணியாற்றியுள்ளார். கடந்த, 2008ல் பணிக்கு சேர்ந்த இவருக்கு, நேற்று முன்தினம் இரவு, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர், சென்னை குற்றப்பிரிவு போலீசில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், குருபரப்பள்ளி ஸ்டேஷனில் பணியாற்றி வரும், எஸ்.ஐ., வசந்தா, 44, என்பவருக்கும், இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர், திருச்சி மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில், ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. இவர்கள் இருவரையும், தற்போதைய பணியிலிருந்து, சேலம் டி.ஐ.ஜி., விடுவிப்பு செய்தவுடன், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடத்துக்கு பணியாற்ற செல்ல வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில், 52 எஸ்.ஐ.,களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் ஆணை வெளியிடப்பட்டது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கண்ணன், வசந்தா ஆகிய இரு எஸ்.ஐ.,க்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X