பொது செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கிலும் நடந்த நிகழ்ச்சி: தி.மு.க.,வில் மாற்று கட்சியினர் ஐக்கியம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஓசூர்: கெலமங்கலம் அருகே முழு ஊரடங்கிலும் நடந்த, தி.மு.க.,வில் மாற்று கட்சியினர் இணையும் விழாவில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதோடு, சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை.


கெலமங்கலம் ஒன்றியம், காரகொண்டப்பள்ளியில், மாற்று கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது. இதில், தளி திமுக., - எம்.எல்.ஏ., பிரகாஷ் முன்னிலையில், மாற்று கட்சியினர் பலர், தி.மு.க.,வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் சமூக இடைவெளியின்றி அனைவரும் திரண்டிருந்தனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நேரத்தில், சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என, அரசு கூறி வருகிறது. ஆனால், நேற்று நடந்த நிகழ்ச்சியில், சமூக இடைவெளியை, தி.மு.க.,வினர் மறந்தனர். மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நேற்று முழு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும், தி.மு.க.,வினர் காரகொண்டப்பள்ளியில் நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். கொரோனா சமயத்தில், கட்சியில் தொண்டர்களை சேர்ப்பதை தீவிரமாக கடைப்பிடிக்கும், அரசியல் கட்சியினர், சமூக இடைவெளியையும், அரசின் உத்தரவுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X