பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 617 கன அடியாக சரிவு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு, 617 கன அடியாக சரிந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு துவங்கிய மழை, இரவு முழுவதும் பெய்து வந்தது. நேற்று காலை நிலவரப்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்தங்கரையில், 89 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. மேலும், கிருஷ்ணகிரியில், 19.2, பெனுகொண்டாபுரம், 16.4, தேன்கனிக்கோட்டை, 16, நெடுங்கல், 14, பாரூர், 12.8, போச்சம்பள்ளி, 12, சூளகிரி, 7, அஞ்செட்டி, 3 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம், 189.4 மி.மீ., மழை பதிவாகியது. இந்நிலையில், கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 739 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 617 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 666 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம், 30.45 அடியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X