பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தியோர் வெளியே செல்லக்கூடாது: கலெக்டர்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி, மாவட்ட கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.


கிருஷ்ணகிரி நகராட்சி ஆர்.எஸ்.லட்மிபுரம் பகுதியில், கொரோனா தொற்றால் தடை செய்யப்பட்ட பகுதியில், வீடு வீடாக நகராட்சி பணியாளர்கள் மூலம், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை, மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார். புதிதாக வரும் நபர்களை கண்காணித்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தவும், அவர்களுக்கு சளி மாதிரி எடுக்கவும், மருத்துவ முகாம் நடத்தும் இடங்களில், முன்கூட்டியே விளம்பர படுத்தவும், மருத்துவ குழுக்களிடம் தெரிவித்தார். மேலும், இப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். கடைகள் இயங்க அனுமதிக்கக்கூடாது. தனிமை படுத்தப்பட்ட நபர்களுக்கு, அவ்வப்போது தேவையான மருந்துகள் மற்றும் கபசுர குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும். தனிமைப் படுத்தப்பட்ட நபர்கள், வெளியே நடமாடக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர், பர்கூர் பேரூராட்சி பி.கொத்தூர், சிகரலப்பள்ளி பஞ்., சக்கிலிநத்தம் மற்றும் மத்தூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளையும் பார்வையிட்டார். ஆய்வின்?போது, ஆர்.டி.ஓ., கற்பகம், குடும்பநல துணை இயக்குனர் ராஜலட்சுமி, டி.எஸ்.பி., தங்கவேல் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X