பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அரசு உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க, இம்மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வு இல்லாத முழு ஊரடங்கை கடைப்பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. நேற்று நான்காவது ஞாயிற்றுக்கிழமையிலும், தளர்வு இல்லாத முழு ஊரடங்கை மக்கள் கடைப்பிடித்தனர். ஊரடங்கால், கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதே போல், மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், எந்த வாகனங்களும் இயங்கவில்லை. போலீசார் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மருந்து வாங்கவும், மருத்துவமனைக்கு செல்வோரை தவிர, வெளியில் நடமாடிய ஒரு சிலரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


இருசக்கர வாகன போட்டி: தர்மபுரி உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் முழு ஊரடங்கை கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டி, வாகனங்களில் உலா வந்தனர். குறிப்பாக, தர்மபுரி நகரில் உள்ள சில பெற்றோர், தங்களது அதிக, சி.சி., திறன் கொண்ட பைக்குகளை, பள்ளிகளில் படிக்கும் தங்களது மகன்களிடம் கொடுத்து அனுப்பினர். முழு ஊரடங்கை கடைப்பிடிக்காமல், போக்குவரத்து சட்டம் குறித்து விழிப்புணர்வு பெறாத மக்களால், நேற்றைய முழு ஊரடங்கு உத்தரவு, தர்மபுரியில் இருசக்கர வாகன போட்டி நடப்பது ?போல் மாறியது. இதை தடுக்க முடியால், போலீசார் தவித்தது குறிப்பிடத்தக்கது.


* அரூரில், பால் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்துக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்க் உள்பட, மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. பஸ் ஸ்டாண்ட், நான்குரோடு, கச்சேரிமேடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், ஊரடங்கை மீறி, வெளியே வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்தனர். மாவட்டத்தில், சில நாட்களாக அதிகரித்து வரும் தொற்றால், நேற்று வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து காணப்பட்டதால், கடைவீதி மற்றும் சாலைகள் வெறிச்சோடியன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X