மலை கிராமத்துக்கு செங்குத்தான பகுதியை சீரமைத்து சாலை அமைக்க வேண்டுகோள்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: ஏக்கல்நத்தம் மலை கிராமத்துக்கு, செங்குத்தான பகுதியை சீரமைத்து, சாலை அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில், 190 குடியிருப்புகள் உள்ளன. இவர்களுக்கு, சின்னசக்னாவூரில் இருந்து மலை கிராமத்துக்கு செல்ல, 4 கி.மீ., தொலைவுக்கு சாலை வசதி இல்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க, மருத்துவமனை செல்ல, வேலைக்கு செல்ல, மலைப்பாதையில் நடந்தே சென்று வந்தனர். இங்கு சாலை அமைக்க, கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது வனத்துறை சார்பில், 2.50 கோடி ரூபாய் செலவில், புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த மாதம் துவங்கின. ஆனால், தற்போது அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை, பழைய மலைப்பாதையில் உள்ள மண்ணைத்தோண்டி, சாலை எப்படி உள்ளதோ அப்படியே அமைத்து வருகின்றனர்.

இது குறித்து, மலை கிராம மக்கள் கூறியதாவது: இச்சாலையில் பல இடங்கள், மிகவும் செங்குத்தாகவும், வளைவு மிகுந்த பகுதியாகவும் உள்ளதால், சாலை அமைத்த பிறகு வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இருசக்கர வாகனங்களில், ஒருவருக்கு மேல் இச்சாலையில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறினாலும், இச்சாலையால் எங்களுக்கு விபத்து அபாயம் மட்டுமே உள்ளது. பயன் ஏதும் இல்லை. எனவே, அதிக வளைவு மற்றும் செங்குத்தான பகுதியை சீரமைத்து, சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X