சம்பவம் செய்தி

தமிழ்நாடு

9 கறவை மாடுகள் பலி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கரியமங்கலம் அண்டப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஆடு, கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில், அப்பகுதியில், கறவை மாடுகளுக்கு மர்ம நோய் தாக்கி பலியாகி வருகின்றன. இதுவரை ஒன்பது கறவை மாடுகள் பலியாகி உள்ளன. இது குறித்து, செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள, அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர்களிடம் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் அமைத்து, கால்நடைகளுக்கு தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X