சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கந்து வசூலில் கொலை மிரட்டல்: அ.தி.மு.க., பிரமுகர் கைது

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

வேலூர்: கந்து வட்டி வசூலில், கொலை மிரட்டல் விடுத்த, அ.தி.மு.க., பிரமுகரை, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கைது செய்தனர்.


வேலூர் மாவட்டம், காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 59; இவர், அ.தி.மு.க.,வில், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணை செயலாளராக இருந்தார். பின்னர், அக்கட்சியிலிருந்து விலகி, அ.ம.மு.க., ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார். கடந்த மாதம், மீண்டும், அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். தற்போது, அடிப்படை உறுப்பினராக மட்டும் உள்ளார். கந்து வட்டி தொழில் செய்யும் இவரிடம், கடன் வாங்கிய பலர், தற்போது, கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். மாதந்தோறும் வட்டியை செலுத்தாவிட்டால், மீட்டர் வட்டி வசூலிப்பேன் என, அவர்களை மிரட்டி உள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட, 50க்கும் மேற்பட்?டோர், வேலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தனர். அதில், வட்டி கட்டாதவர்கள் வீடுகளுக்கு, வெங்கடேசன் அடியாட்களை அனுப்பி, பொருட்களை அபகரித்து வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். மாவட்ட குற்றப்பிரிவு, டி.எஸ்.பி., பழனி செல்வம் விசாரணை செய்தார். அதில், 100 ரூபாய்க்கு, ஆறு ரூபாய் வட்டி வசூலித்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம், வெங்கடேசனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X