பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி தி.மு.க., அமைச்சர் துரைமுருகன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

வேலூர்: 'கடலூர் - சித்தூர் இணைப்பு சாலையில், ஹைமாஸ் விளக்கு, நிழற்குடை அமைக்க வேண்டும்' என, தி.மு.க., மாஜி அமைச்சரும், காட்பாடி தொகுதி, எம்.எல்.ஏ.,வுமான துரைமுருகன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில், அவர் தெரிவித்துள்ளதாவது: வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடலூர் - சித்தூர் இணைப்பு சாலையில், தமிழகத்தில் உள்ள கல்புதூர் முதல், ஆந்திரா எல்லை வரை, 5 கி.மீ., தூரம் சென்டர்மீடியன் அமைக்கும் பணி, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கிறது. இதில், தமிழக எல்லையில், வனத்துறை பாதுகாப்பு மற்றும் வணிக வரித்துறை ஆகிய சோதனைச்சாவடிகள், தமிழ்நாடு, டெல் வெடி மருந்து தொழிற்சாலை ஆகியவை உள்ளன. தென், வட மாவட்டத்தினர், திருப்பதி செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். சென்னை சிப்காட்டிலிருந்து, ஆந்திராவுக்கு கனரக வாகனங்கள், சொகுசு பஸ்கள் இந்த வழியாகவே சென்று வருகின்றன. எனவே, இந்த சாலையை அகலப்படுத்தி, உயர் மின் விளக்குகள் மற்றும் சோதனைச்சாவடி உள்ள பகுதிகளில், ஹைமாஸ் விளக்குகள், சாலையின் இருபுறமும் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். காங்கேயநல்லூரில் இருந்து, வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை, பாலாற்றில் தரைப்பாலம், பொன்னையாற்றில் குகையநல்லூர் அருகே தடுப்பணை, ஆகிய பணிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X