தமிழ்நாடு

டி.என்.பி.எல்., ஆலையில் ஒருவர் திடீர் மரணம்: கொரோனா அச்சத்தில் தொழிலாளர்கள்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கரூர்: டி.என்.பி.எல்., ஆலையில், பொறியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திடீரென மயங்கி விழுந்து தொழிலாளி நேற்று மரணமடைந்தது, மற்றவர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் அருகே, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த, 27 வயது ஆண், காகிதபுரம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில், உதவி பொறியாளராக (ஷிப்ட் இன்ஜினியர்) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டு, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது பிரிவு மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என, 30 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலாயுதம்பாளையம் காந்திநகரை சேர்ந்த, 52 வயது ஆண், அந்த நிறுவனத்தில், ஹெல்பராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, 9:00 மணிக்கு ஆலையில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில், இரு சக்கர வாகனத்தை நிறுத்தும் போது, அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை, டி.என்.பி.எல்., நிறுவன மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த போது, ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, பொறியாளர் ஒருவர் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு தொழிலாளி திடீரென மரணடைந்துள்ளார். இதனால், தொழிலாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து, வேலாயுதம்பாளையம் மருத்துவ அலுவலர் பரதன் கூறுகையில், ''அவரது இறப்பு குறித்த காரணம், பிரேத பரிசோதனையில் தெரிய வரும். மேலும், ஒருவருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்து, திடீரென இறந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்பதே, தமிழக அரசின் வழிகாட்டுதலாகும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X