அதிகரித்து வரும் அமராவதி அணை நீர்மட்டம்: சோளம் அறுவடை தீவிரம்| Dinamalar

தமிழ்நாடு

அதிகரித்து வரும் அமராவதி அணை நீர்மட்டம்: சோளம் அறுவடை தீவிரம்

Added : ஜூலை 27, 2020
Share

கரூர்: அமராவதி அணை நீர்மட்டம் அதிகரித்து வருவதால், பாசன பகுதிகளில் சோளம் அறுவடையில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணையில் இருந்து, நெல் சாகுபடிக்காக ஆண்டு தோறும், ஆடி மாத இறுதியில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், அமராவதி பாசன பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான் தோன்றிமலை வட்டாரங்களில் விவசாயிகள், மழையை நம்பி மூன்று மாதங்களுக்கு முன் சோளம் பயிரிட்டனர். தற்போது, சோளம் முற்றிய நிலையில் அறுவடை பணி துவங்கியுள்ளது.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: மழையை நம்பி பயிரிடப்பட்ட சோளம் தற்போது, அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கோழி தீவனம், பிஸ்கட் மற்றும் உணவுக்காக சோளம் அதிகளவில் பயன்படுகிறது. கடந்தாண்டு, 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 8,000 ரூபாய் வரை விலை போனது. தற்போது, 6,000 ரூபாய்க்கு விலை போகிறது. காரணம், ஆடி மாதத்தில் மழை பெய்யாமல் காற்று அடிக்க வேண்டும். ஆனால், நடப்பு ஆடி மாதத்தில் மழை பெய்து விட்டதால், சோளம் விளைச்சல் குறைந்து விட்டதால், விலை அதிகரிக்கவில்லை. திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 326 கன அடி தண்ணீர் வந்தது. பாசன வாய்க்காலில், 11 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணை நீர்மட்டம், 49.48 அடியாக இருந்தது. கேரளா உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், அமராவதி அணை நீர்மட்டம், 50 அடியை இன்று அல்லது நாளை எட்டி விடும். அப்போது, பாசனத்துக்காக அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். நெல் சாகுபடிக்காக, சோளம் அறுவடையை தீவிரப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X