பொது செய்தி

இந்தியா

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு வினோதமானதா...?

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
MGR, MGR statue, saffron, எம்ஜிஆர், சிலை, காவி

'ஆமாம்... அது தானே, வினோதமாக இருக்கிறதே...' என, கேள்வி எழுப்பத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

காவி அனைவருக்கும் பொதுவானது. ஈ.வெ.ரா., சிலையில், காவி சாயத்தை ஊற்றியது தவறு தான். ஆனால், எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி துண்டை போர்த்தியது, எப்படி காட்டுமிராண்டித்தனமாகும்?

'கொரோனா காலத்தில், வேலை கிடைப்பதே பெரிது; பேசாமல், வேலையை பாருங்க சார்...' என, கண்டிக்கத் தோன்றும் விதத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் செல்வம் பேட்டி:

கொரோனா காலத்தில் அரசு துறைகளில், 50 சதவீதம் ஊழியர்கள் பணிபுரிய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால், கருவூலத்துறையில், 100 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வர கட்டாயப்படுத்தப்படுகிறது.

'அதுபோல, நகர்ப்புறங்களில் உள்ள, பிற சந்தைகளையும், கிராமங்களில் துவக்குவீர்களா...' என, வில்லங்கமாக கேட்கத் துாண்டும் விதத்தில், கால்நடைத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேட்டி:

கொரோனாவால் மூடியுள்ள, கால்நடை சந்தைகளை திறப்பது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. நகர்ப்புறத்தில் உள்ள சந்தைகளை, கிராமங்களில் திறக்கலாம் என்று, அரசு உத்தேசித்துள்ளது.

'எந்தெந்த விதங்களில் எல்லாம், மக்களுக்கு பீதியை உண்டாக்க முடியுமோ அதை செவ்வனே செய்கிறீர்களே...' என, 'பாராட்டத்' துாண்டும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:


latest tamil news




சென்னை, நங்கநல்லுாரில், மரணமடைந்த சிறுமி, டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா ஆட்டம் போடும் நிலையில், டெங்குவும் சேர்ந்துள்ளது. அபாயத்தை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.

'ஒன்றுபடவும் முடியாது; ஒருமித்து குரல் கொடுக்கவும் முடியாது; கொரோனா ஊரடங்கு, இன்னும் அமலில் உள்ளது என்பதை, கிண்டலாக நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:

வகுப்புவாரி பிரதித்துவத்தை வலியுறுத்தி, மருத்துவ படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை நிலை நிறுத்த, ஒன்றுபட்டு ஒருமித்து குரல் கொடுப்போம்.

'ஒருவரை பார்த்து இன்னொருவர் திருந்தி விட்டால், இந்த சமுதாயத்தில் குற்றங்களே நிகழாதே...' என, கூறத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை:

சாத்தான்குளம் இரட்டைக் கொலை போலவே, தென்காசி அருகே, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஜாதி, மதம் பார்த்து, அரசியல் லாபம் பார்த்து தான் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பீர்கள் என்றால், நீங்களும் குற்றவாளியே!

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
27-ஜூலை-202017:12:10 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam எம்ஜிஆர் அவர்களின் சிலைக்கு காவி உடை போர்த்தியது காட்டுமிராண்டித்த தனம்தான். அவரை வைத்து எத்தனையோ பேர் பிழைத்தனர், தமிழகத்தில் வன்முறை உருவாக்கத் திமுக-இடதுசாரிகள் மட்டுமல்ல தமிழக பாஜகவும்தான் காரணமாகின்றார்கள். எம்ஜிஆர் அவர்கள் மதத் தீவிரவாதியல்ல. முருகனையும் மூகாம்பிகையையும் வணங்கியவர். "புத்தன், இயேசு, காந்தி பிறந்தது யாருக்காக தோழா -" என்று கேள்வி கேட்டுப் பதிலும் சொன்னவர். அவர் போலி அரசியல்வாதி அல்ல. என்பதை உணர வேண்டும், அவர் காலத்தில் எல்லா மதத்தினரையும் அன்புடன் நடத்தியவர். அவருக்கு இணை அவர்தான். மலிவு அரசியல் நடத்தாதீர்கள்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
27-ஜூலை-202016:59:57 IST Report Abuse
sundarsvpr சிலை வைத்தல் கலாச்சாரம் தலைவர்கள் சமாதி வைத்தல் முதலியவைகள் அறவே கூடாது. அப்படி வைத்தல் என்ற நிலைப்பாடு ஏற்பட்டால் பொது இடத்தில வைத்தல் தவறு. தனிப்பட்டவர் இடத்தில வைத்த சிலையை அசிங்கப்படுத்தினால் சட்டப்படி உரிமையாளர் காவல் துறையை நாடலாம். பொது இடத்தில சிலை வைக்க மக்கள் இசைவு அவசியம். சிலை வைத்தவர்கள் தான் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கவேண்டும்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-ஜூலை-202016:45:09 IST Report Abuse
வெகுளி காவி பொன்மன செம்மலின் அழகுக்கு அழகு சேர்க்கிறது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X