எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு வினோதமானதா...?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு வினோதமானதா...?

Updated : ஆக 18, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (22)
Share
'ஆமாம்... அது தானே, வினோதமாக இருக்கிறதே...' என, கேள்வி எழுப்பத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:காவி அனைவருக்கும் பொதுவானது. ஈ.வெ.ரா., சிலையில், காவி சாயத்தை ஊற்றியது தவறு தான். ஆனால், எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி துண்டை போர்த்தியது, எப்படி காட்டுமிராண்டித்தனமாகும்?'கொரோனா காலத்தில், வேலை கிடைப்பதே பெரிது; பேசாமல், வேலையை பாருங்க
எம்ஜிஆர், சிலை, காவி

'ஆமாம்... அது தானே, வினோதமாக இருக்கிறதே...' என, கேள்வி எழுப்பத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

காவி அனைவருக்கும் பொதுவானது. ஈ.வெ.ரா., சிலையில், காவி சாயத்தை ஊற்றியது தவறு தான். ஆனால், எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி துண்டை போர்த்தியது, எப்படி காட்டுமிராண்டித்தனமாகும்?

'கொரோனா காலத்தில், வேலை கிடைப்பதே பெரிது; பேசாமல், வேலையை பாருங்க சார்...' என, கண்டிக்கத் தோன்றும் விதத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் செல்வம் பேட்டி:

கொரோனா காலத்தில் அரசு துறைகளில், 50 சதவீதம் ஊழியர்கள் பணிபுரிய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால், கருவூலத்துறையில், 100 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வர கட்டாயப்படுத்தப்படுகிறது.

'அதுபோல, நகர்ப்புறங்களில் உள்ள, பிற சந்தைகளையும், கிராமங்களில் துவக்குவீர்களா...' என, வில்லங்கமாக கேட்கத் துாண்டும் விதத்தில், கால்நடைத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேட்டி:

கொரோனாவால் மூடியுள்ள, கால்நடை சந்தைகளை திறப்பது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. நகர்ப்புறத்தில் உள்ள சந்தைகளை, கிராமங்களில் திறக்கலாம் என்று, அரசு உத்தேசித்துள்ளது.

'எந்தெந்த விதங்களில் எல்லாம், மக்களுக்கு பீதியை உண்டாக்க முடியுமோ அதை செவ்வனே செய்கிறீர்களே...' என, 'பாராட்டத்' துாண்டும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:


latest tamil news




சென்னை, நங்கநல்லுாரில், மரணமடைந்த சிறுமி, டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா ஆட்டம் போடும் நிலையில், டெங்குவும் சேர்ந்துள்ளது. அபாயத்தை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.

'ஒன்றுபடவும் முடியாது; ஒருமித்து குரல் கொடுக்கவும் முடியாது; கொரோனா ஊரடங்கு, இன்னும் அமலில் உள்ளது என்பதை, கிண்டலாக நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:

வகுப்புவாரி பிரதித்துவத்தை வலியுறுத்தி, மருத்துவ படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை நிலை நிறுத்த, ஒன்றுபட்டு ஒருமித்து குரல் கொடுப்போம்.

'ஒருவரை பார்த்து இன்னொருவர் திருந்தி விட்டால், இந்த சமுதாயத்தில் குற்றங்களே நிகழாதே...' என, கூறத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை:

சாத்தான்குளம் இரட்டைக் கொலை போலவே, தென்காசி அருகே, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஜாதி, மதம் பார்த்து, அரசியல் லாபம் பார்த்து தான் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பீர்கள் என்றால், நீங்களும் குற்றவாளியே!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X