பொது செய்தி

தமிழ்நாடு

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் விபத்து காப்பீடு பாலிசியில் விலகிக்கொள்ள அனுமதி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சேலம்: அரசு போக்குவரத்துக்கழகத்தில், விபத்து காப்பீடுக்கு பணம் செலுத்தி வரும் தொழிலாளர்கள், தேவைப்பட்டால் விலகிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரியும், 1.40 லட்சம் தொழிலாளருக்கு, மாத சம்பளத்தில், 630 ரூபாய், விபத்து காப்பீடு பாலிசியின் பிரீமியத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பஸ்கள் இயங்காததால், பிடித்தம் செய்த தொகையை, தேவைப்படும் ஊழியர்கள் திரும்ப பெற்றுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை கோட்டம், ஈரோடு மண்டல நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விபரம்: போக்குவரத்துக்கழகம், ஈரோடு மண்டல அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஐ.என்.டி.யூ.சி., பொறியாளர் சங்கம் ஆகிய உறுப்பினரிடமிருந்து, 630 ரூபாய் வீதம், விபத்து காப்பீடு பாலிசி பிரீமியத்தொகை, ஜூலை, 2020 சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட உள்ளது. விருப்பம் இல்லாத பணியாளர், ஜூலை 28க்குள்(நாளை), தங்கள் கடிதங்களை, நிர்வாக, துணை மேலாளருக்கு அனுப்பும் பட்சத்தில் பிடித்தம் செய்யப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஈரோடு மண்டலத்தில் வழங்கப்பட்டுள்ள இச்சலுகை, பிற கோட்டம், மண்டலங்களில், போக்குவரத்து தொழிலாளருக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X