பொது செய்தி

தமிழ்நாடு

போலி டாக்டர் நடத்தி வந்த கிளினிக்கிற்கு மீண்டும் 'சீல்'

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ராணிப்பேட்டை: காவனூரில், போலி டாக்டர் நடத்திய கிளினிக்கிற்கு, அதிகாரிகள் மீண்டும், 'சீல்' வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த காவனூரில், போலி டாக்டர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக, கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின்படி, கடந்த மாதம், 11ல் காவனூரில், வருவாய் துறையினர் நான்கு கிளினிக்குகளுக்கு, 'சீல்' வைத்து, மூன்று போலி டாக்டர்களை பிடித்தனர். அப்போது, திமிரி சாலையில், தலைமறைவான ஒரு போலி டாக்டர் நடத்தி வந்த, கிளினிக்கிற்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். இந்நிலையில், 'சீல்' வைத்த அந்த கிளினிக்கின் பின்புற வழியாக, நோயாளிகளை வரவழைத்து தலைமறைவான அந்த போலி டாக்டர், தொடர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக, மாவட்ட கலெக்டருக்கு மீண்டும் புகார் சென்றது. அதன்படி, ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையில், வருவாய்த்துறையினர் நேற்று அந்த கிளிக்கில் சோதனை நடத்தினர். அப்போது, கொரோனாவுக்கு அங்கு மருத்துவம் பார்த்து வருவதும், அதை நடத்தி வந்தது, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த காந்தி, 68 என்பதும் தெரிய வந்தது. அதிகாரிகள் வருகையை அறிந்து, அவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து, அந்த கிளினிக் உள்ளே, யாரும் செல்ல முடியாதபடி அனைத்து வழிகளையும் வருவாய்த்துறையினர் அடைத்து, 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X