தமிழ்நாடு

கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.100 கோடி பாதிப்பு

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.100 கோடி பாதிப்பு

மதுரை:மதுரையில் தொடக்க வேளாண் கூட்டுறவு மற்றும் நகர் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி பரிவர்த்தனை பாதித்துள்ளது.

மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 198 தொடக்க வேளாண் கூட்டுறவு மற்றும் நகர் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர். அண்ணா தொழிற்சங்கத்தை தவிர பிற அனைத்து சங்கங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் 4வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாயப் பணிகள் முடங்கியுள்ளன. உரம், விதைகள், பூச்சி மருந்து கிடைக்கவில்லை.வங்கி டெபாசிட் பணத்தை எடுக்க முடியாமல் பொருளாதார ரீதியாகவும் உறுப்பினர்கள் முடங்கி உள்ளனர்.

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஆசிரியதேவன் கூறியதாவது:தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமே வழக்கம்போல் உறுப்பினர்களுக்கு கடன் வழங்க வேண்டும். தொடக்க நிலை சங்கங்களுக்கு வருமான வரியில் விலக்கு உள்ள நிலையில் பரிவர்த்தனைக்கு 2 சதவீதம் வரி விதிப்பதை முழுமையாக ரத்து வேண்டும்.தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மின்னணு வங்கி சேவை திட்டத்திப்படி இணைக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடக்கிறது. மாநில அளவில் ரூ.3000 கோடி பரிவர்த்தனை பாதித்துள்ளது. அரசு அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். இல்லாத பட்சத்தில் போராட்டம் தொடரும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X