போலீஸ் செய்திகள்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

வழக்கறிஞர் வீட்டில் திருட்டு
மதுரை: திருமோகூர் லோகநாதன்39. ஜூலை 24ல் சொந்த கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்ற நிலையில், வீட்டின் கதவை உடைத்து மர்மநபர் 14 பவுன் நகைகள், வைர நகை, கேமரா, ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்றார்.ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

குண்டர் சட்டத்தில் கைது
மதுரை: ஆனையூர் அழகுபாண்டி 29. திருட்டு வழக்குகள் உள்ளன. கூடல்புதுார் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் பரிந்துரைபடி, இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார்.

போலி ஆவணம் மூலம்ரூ.1.16 கோடி வங்கி கடன்
மதுரை: மாத்துார் சுரேஷ்கண்ணா 41. இவர் அப்பகுதியில் பள்ளி நடத்தி வருகிறார். மாட்டுத்தாவணிகரூர் வைஸ்ய வங்கி கிளையில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.1.16 கோடி கடன் பெற்றதாக சுரேஷ்கண்ணா உட்பட11 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொலை செய்ய முயற்சி
மதுரை: கரும்பாலை சிவக்குமார். இவரை நேற்றுமுன்தினம் இரவு சிலர் முன்விரோதம் காரணமாக கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்தனர். இதுதொடர்பாக மயில் கார்த்திக், இசக்கிமுத்து, ஆகாஷ் தமிழன், சிவமணி, உதயபிரகாஷ், அஜீத், அழகர்சாமி, பூபதிராஜா ஆகியோரிடம் அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்லுாரியில் திருட்டு
மதுரை: அரசு மீனாட்சி பெண்கள் கல்லுாரி ஊரடங்கால் மூடப்பட்டுஉள்ளது. வளாகத்தில் தற்காலிக காய்கறி சந்தை செயல்படுகிறது. இந்நிலையில் கல்லுாரி ஆய்வகத்தில் பித்தளை விளக்குகள், வெண்கல மணி உட்பட ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள்திருடப்பட்டன. போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர்களுக்கு தீ வைப்பு
மதுரை: தெற்குமாசிவீதி இப்ராகிம்.அப்பகுதியில் பழைய டூவீலர்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். நேற்றுமுன்தினம் இரவு கடை வாசலில் நிறுத்தியிருந்த 8 டூவீலர்கள் மீது 2 பேர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 2 வாகனங்கள் எரிந்தன. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

இருவர் கைது
கொட்டாம்பட்டி: பாண்டாங்குடி பிரிவு மற்றும் கருங்காலக்குடி பகுதிகளில் டி.எஸ்.பி., சுபாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு மது விற்ற சொக்கலிங்கபுரம் முருகேசன்50, கருங்காலக்குடி சிவாவை 26, கைது செய்து 64 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மது விற்றவர்கள் கைது
பேரையூர்: பெருங்காமநல்லுார் பிச்சைமணி 43. இவர் வீட்டில் மது விற்றதாக கைது செய்யப்பட்டு 67 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெரியகட்டளையில் மது விற்ற மதியழகனை 51, கைது செய்து 30 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி
திருப்பரங்குன்றம்: மதுரை உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாம் சிவராஜ் 47, இவரது மனைவி அமுதா 43, சிவராஜ் வேறு பெண்ணுடன் அலைபேசியில் பேசியதால் ஜூலை 24 இரவு வீட்டில் துாங்கிய சிவராஜ் மீது அமுதா கிரைண்டர் கல்லை போட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இறந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் ஏற்கனவே அமுதாவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X