16 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்: விரைந்து வழங்க தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

16 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்: விரைந்து வழங்க தீர்மானம்

Added : ஜூலை 27, 2020
Share


மதுரை:'பதினாறு மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை உடன் வழங்க வேண்டும்' என அரசு போக்குவரத்து எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.இச்சங்க நிர்வாகிகள் கூட்டம் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. பணியில் உள்ள மற்றும் 2 லட்சம் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு தொகை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மத்திய அரசின் நிதி பெற்று மாநில அரசு வழங்க வேண்டும். 2019 ஏப்., முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களும் இதுவரை கிடைக்கவில்லை. விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவர் செல்லத்துரை, துணை தலைவர்கள் கண்ணன், ஒச்சாதேவர், பொதுச்செயலாளர் ஷாஜஹான், செயலாளர்கள் மலைச்சாமி, பாலுச்சாமி, பொருளாளர் ரவி, ஆலோசகர்கள் குணசீலன், அங்குசாமி, சவுந்தரராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X