2 கோடியே 31 லட்சத்து 4 ஆயிரத்து 536 பேர் மீண்டனர்

Updated : செப் 22, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (253)
Share
Advertisement

சென்னை : இன்று (செப்டம்பர்- 22 ம் தேதி ) காலை ; 07: 15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 3 கோடியே 14 லட்சத்து 76 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 9 லட்சத்து 69 ஆயிரத்து 018 பேர் பலியாகி உள்ளனர். 2 கோடியே 31 லட்சத்து 4 ஆயிரத்து 536 பேர் மீண்டனர்.

கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 2 வது இடத்திற்கு வந்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா என பட்டியலில் டாப்பில் உள்ளது.


முதலிடத்தில் அமெரிக்காஉலகிலேயே அதிக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 70 லட்சத்து 46 ஆயிரத்து 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 4 ஆயிரத்து 506 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் 55 லட்சத்து 60 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டு, 44 லட்சத்து 94 ஆயிரத்து 720 பேர் மீண்டுள்ளனர். 88 ஆயிரத்து 965 பேர் பலியாகினர்.


பிரேசிலில் 45 லட்சத்து 60 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,37,350 பேர் பலியாகினர்.

ரஷ்யாவில் 11 லட்சத்து 9 ஆயிரத்து 595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 19,489 பேர் பலியாகினர்.

பெருவில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 896 பேர் பாதிக்கப்பட்டு 31,474 பேர் பலியாகினர்.

கொலம்பியாவில் 7 லட்சத்து 70 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டு 24,397 பேர் பலியாகினர்.

மெக்சிகோவில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 663 பேர் பாதிக்கப்பட்டு, 73,493 பேர் பலியாகினர்.

ஸ்பெயின் நாட்டில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 663 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 ஆயிரத்து 663 பேர் இறந்துள்ளனர்.தென் ஆப்ரிக்காவில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,992 பேர் இறந்துள்ளனர்.

அர்ஜென்டினாவில் 6 லட்சத்து 40 ஆயிரத்து 147 பேர் பாதிக்கப்பட்டு 13,482 பேர் பலியாகினர்.

சிலியில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 468 பேர் பாதிக்கப்பட்டு 12,298 பேர் பலியாகினர்.

பிரான்சில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,338 பேர் இறந்துள்ளனர்.ஈரானில் 4 லட்சத்து 25 ஆயிரத்து 481 பேர் பாதிக்கப்பட்டு, 24,478 பேர் பலியாகினர்.

பிரிட்டனில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பட்டனர். 41,788 பேர் பலியாகினர்.

வங்கதேசத்தில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,979 பேர் இறந்துள்ளனர்.சவுதி அரேபியா 3 லட்சத்து 30 ஆயிரத்து 246 பேர் பாதிக்கப்பட்டு 4,512 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 304 பேர் பாதிக்கப்பட்டு 6,420 பேர் உயிரிழந்துள்ளனர்.


துருக்கியில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 610 பேர் பாதிக்கப்பட்டு, 7,574 பேர் பலியாகினர்.

இத்தாலியில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டு 35,724 பேர் பலியாகினர்.


ஜெர்மனியில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டு 9,481 பேர் பலியாகினர்.

கனடாவில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டு 9,228 பேர் இறந்துள்ளனர்.

சீனாவில் 85 ஆயிரத்து 291 பேர் பாதிக்கப்பட்டு, 4,634 பேர் பலியாகினர்.

ஜப்பானில் 79,140 பேர் பாதிக்கப்பட்டு 1,500 பேர் உயிரிழந்துள்ளனர்.


ஆப்கனில் 39,074 பேர் பாதிக்கப்பட்டு 1,444 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் மோடி ஏப்.14ல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வரும் மே.3 ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என தெரிவித்தார். இந்நிலையில் ( மே.1 ம் தேதி ) மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் 14 நாட்களுக்கு மே. 17 வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்டமாக பொது ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய மே.30ல் அறிவிப்பு வெளியிட்டது. 5-ம் கட்டமாக மத்திய அரசு அன்லாக் 1. 0 என்ற பெயரில் சில புதிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. வெளியிடப்பட்ட தளர்வுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்:


முதல்கட்ட தளர்வுகள்:* ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.


இரண்டாம் கட்ட தளர்வுகள்* இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.


மூன்றாம் கட்ட தளர்வுகள்* மூன்றாம் கட்ட தளர்வில் சினிமா, பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், மெட்ரோ ரயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியன திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நான்காம் கட்ட தளர்வுகள்நான்காம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில் செப்டம்பர் 7 முதல் நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் சேவையை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.21 முதல் திறந்தவெளி திரையரங்கத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பொழுது போக்கு, விளையாட்டு அரங்கம், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்குபெற 100 பேர் வரை அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக ஊரடங்கு நீட்டிப்புகொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடனும் செப்.,30 வரை, நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாகவும், மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.செப்.7 முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.
வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதித்துள்ளதுடன், ஞாயிற்றுகிழமைகளில் அமல்படுத்தப்படும் தளர்வில்லா ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை : கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 29 ம் தேதி கலெக்டர்களுடனும், மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்களுடனும் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையிலும், அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனையின் பேரிலும், தற்போதுள்ள ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் 30.9.2020 வரை நீட்டிக்கப்படுகிறது.
எனினும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளுடன், செப்.,1 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (253)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
28-ஜூலை-202017:20:01 IST Report Abuse
M.COM.N.K.K. இது இதயத்திற்கு இதமான செய்திதானே நல்லது நல்லது
Rate this:
Cancel
10-ஜூலை-202013:17:39 IST Report Abuse
AL.Nachi God bleesed
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜூலை-202013:08:18 IST Report Abuse
Tamilan இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் வரலாறு காணாத தோல்வியில் கிடைத்த வரலாறு காணாத பாதி வெற்றி என்பதுதான் சரியானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X