பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

Added : ஜூலை 27, 2020
Share

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், கொரோனா தொற்று பரவாமல் இருக்க, பல்வேறு பொதுநல அமைப்பினர் பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். மாநில மக்கள் உரிமை இயக்கம் சார்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. முகக்கவசங்கள், கிருமிநாசினி மருந்து ஆகியனவும் வழங்கப்பட்டது. சமூக இடைவெளி கடைப்பிடித்தல் அவசியம் குறித்து, மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பிலிருந்து, தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து, துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. நிர்வாகிகள் சவுண்டப்பன், மோகன்ராஜ், தாமு, தனசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X