திருச்செங்கோடு: திருச்செங்கோடு, நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மனநல பயிற்சி, கொரோனா விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் சையத் முஸ்தபா கமால் தலைமை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் ஜான்ராஜா முன்னிலை வகித்தார். நாமக்கல், அரசு மருத்துவமனை மனநல ஆலோசகர் ரமேஷ் பேசியதாவது: நல்ல தூக்கம், சந்தோஷம், உணவு இவையே நல்ல மனநிலைக்கு முக்கிய காரணம். உடலும், மனமும் இயக்கத்தில் இருக்க வேண்டும். மனதை வருத்தப்படக்கூடிய, செயல்களை செயல்படுத்தும் போது மனம் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை குறைக்க, மூச்சுப்பயிற்சி அவசியம். முதலில் சுவாசித்தல் என்பது, மூக்கின் வழியாக நடைபெற வேண்டும். வாய் வழியாக சுவாசிக்கக் கூடாது. இரண்டாவதாக, நம்முடைய சுவாசம் அடிவயிறு வரை சென்று வர வேண்டும். நாம் சிரிக்கும் போது, மனதிற்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும். கை தட்டல் பயிற்சி மூலம், தசைகள், தசைநார்கள் வலிமை பெறும். மனம் ஒருமைப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில், 80க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE