பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் வெறிச்சோடிய நாமக்கல் சாலைகள்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அறிவிக்கப்பட்டுள்ள நான்காவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால், நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.


கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், மோகனூர், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், பள்ளிபாளையம், குமாரபாளையம் என. அனைத்து இடங்களிலும் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. ஆட்டோ, ?ஷர் ஆட்டோ, வாடகை கார், வேன், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயக்கப்படவில்லை. நாமக்கல்லின் முக்கிய சாலைகள், வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் நடமாட்டமும் குறைந்தே காணப்பட்டது. அம்மா உணவகங்கள் மட்டும் வழக்கம்போல இயங்கின. இன்று (27) காலை 6:00 மணி வரை, ஊரடங்கு அமலில் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X