பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 175 பேர் கைது; 79 வாகனங்கள் பறிமுதல்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது, அவசியமின்றி சுற்றித் திரிந்த, 175 பேர் கைது செய்யப்பட்டனர். 79 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி., சக்தி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று பரவுதலை தடுக்க, நேற்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்ட மக்கள், முழு ஒத்துழைப்பு வழங்கினர். மேலும், அவசியமின்றி சுற்றித்திரிந்த, 175 பேரை கண்டறிந்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, 79 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மார்ச், 25 முதல், ஜூலை, 26 வரை, 11 ஆயிரத்து, 254 வழக்குகள் பதிந்து, 14 ஆயிரத்து, 790 பேர் கைது செய்யப்பட்டு, 5,634 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X