மாவட்டத்தில் ஒன்பது பேருக்கு கொரோனா: தொற்று எண்ணிக்கை 520 ஆக உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் ஒன்பது பேருக்கு கொரோனா: தொற்று எண்ணிக்கை 520 ஆக உயர்வு

Added : ஜூலை 27, 2020
Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரை, நேற்று கீரம்பூர் ஆண்டிப்பட்டியை சேர்ந்த, 60 வயது ஆண், ஆண்டாபுரத்தில், 69

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரை, நேற்று கீரம்பூர் ஆண்டிப்பட்டியை சேர்ந்த, 60 வயது ஆண், ஆண்டாபுரத்தில், 69 வயது முதியவர், மோகனூரில், 70 வயது முதியவர், பாண்டமங்கலத்தில், 75 வயது முதியவர், மோகனூர் கலைவாணி நகரை சேர்ந்த, 71 வயது மூதாட்டி, சேவம்பட்டியில், 25 வயது வாலிபர், நாமக்கல்லில், 44 வயது ஆண், ஆலாம்பாளையத்தில், 34 வயது ஆண், காடச்சநல்லூரில், 28 வயது வாலிபர் என, ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 520 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஏற்கனவே, 234 பேர் குணமாகி வீடு திரும்பிய நிலையில், நேற்று மேலும், 10 பேர் குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள நபர்களில், ஐந்து பேர் பலியான நிலையில், 271 பேர் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேலம், கரூர், கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X