பொது செய்தி

தமிழ்நாடு

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் நாமக்கல் மாணவியிடம் பேசிய பிரதமர் மோடி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்று, சாதனை படைத்த நாமக்கல் மாணவியிடம், பிரதமர் மோடி மொபைல் போனில் பேசி வாழ்த்துக் கூறினார்.


பிரதமர் மோடி, அகில இந்திய வானொலியில், நாட்டு மக்களுக்கு உரையாற்றும், 'மனதின் குரல்' நிகழ்ச்சி (மன் கி பாத்) நேற்று ஒலிபரப்பானது. பிரதமர் பேசும்போது, நாமக்கல், பரமத்தி சாலை இ.பி., காலனியில் வசிக்கும், டேங்கர் லாரி டிரைவர் நடராஜன் மகள் பிளஸ் 2 (சி.பி.எஸ்.இ.,) படிக்கும் கனிகாவிடம் பேசினார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வில், 500க்கு, 490 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த அவரிடம், 'ஏழை குடும்பத்தில் பிறந்து, மிக நல்ல முறையில் கல்வி கற்று, இன்று டாக்டராக வேண்டும் என்ற கனவுடனும், லட்சியத்துடனும் கல்வி பயணத்தை தொடர்வதற்கு வாழ்த்துக்கள்' என, மாணவியிடம், பிரதமர் பேசினார். மேலும், மாணவிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், பிரதமர் பாராட்டுகளையும் தெரிவித்தார். இதுதவிர, டாக்டருக்கு படிக்கும் அவரது சகோதரி சிவானி என்பவருக்கும், பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 'ஏழை குடும்பத்தில் இருந்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள், நல்ல முறையில் நாட்டிற்கு சேவை ஆற்ற முடியும்' என்று அப்போது கூறினார்.

இதுகுறித்து மாணவி கனிகா கூறியதாவது: 'மன் கீ பாத்' நிகழ்ச்சி குறித்து, கடந்த, 24 இரவு, 7:30 மணிக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து, மொபைல்போனில் தொடர்பு கொண்ட அதிகாரிகள், சிறிது நேரத்தில் பிரதமர் மோடி உங்களிடம் பேசுவார் என, தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த நான், அவரது குரலை கேட்க ஆவலுடன் இருந்தேன். சிறிது நேரத்தில் பேசிய பிரதமர் மோடி, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர், தேர்வில் வெற்றி பெற்றதற்கு முயற்சித்தது குறித்தும், எதிர்கால லட்சியம் என்ன என்பது குறித்தும் என்னிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரதமரிடம் பேசியது மிகுந்த மகிழ்ச்சியாகவும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X