பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணையில் இருந்து பாசன வாய்க்காலில் பாய்ந்தோடும் தண்ணீர்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கரூர்: மாயனூர் கதவணையில் இருந்து, பாசன வாய்க்காலில் சாகுபடிக்காக, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூரில் காவிரியாற்றின் குறுக்கே, 1.5 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கப்படும் நிலையில், கதவணை கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், 15ல் மாயனூர் கதவணைக்கு வந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு, தண்ணீர் சேர்ந்த பிறகு, 17 முக்கிய பாசன வாய்க்கால்களில் படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டது. மாயனூர் கதவணை யில் இருந்தும், கட் டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் மூலம், ஆயிரக்கணக்கான நிலங்களில், குறுவை சாகுபடி பணி துவங்கியுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 10 ஆயிரத்து, 192 கன அடி தண்ணீர் வந்தது. அதில், 9,772 கன அடி தண்ணீர் காவிரியாற்றிலும், இரண்டு பாசன வாய்க்காலில், 420 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழை விபரம் (மி.மீ.,) அளவு: குளித்தலை, 1, தோகைமலை, 20, கிருஷ்ணராயபுரம், 2.4, மாயனூர், 3, பஞ்சப்பட்டி, 2.2, பாலவிடுதி, 3.4 மி.மீ., என, மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக, 2.67 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X