பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்கள் எதிர்பார்ப்பு: ஊரடங்கால் கோரைப்பாய் விற்பனை 'டல்'; சந்தையை எதிர்பார்க்கும் உற்பத்தியாளர்கள்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கரூர்: கடந்த, நான்கு மாதங்களாக ஊரடங்கு காரணமாக கோரைபாய் விற்பனை குறைந்துள்ளது.


கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று கரை பகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கோரைப்புல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், தயாரிக்கப்படும் பாய், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். திருமண சடங்குகளில், கோரைபுல்லில் நெய்யப்பட்ட பாய்க்கு முக்கிய இடம் உண்டு. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தயாரிக்கப்படும் கோரைபாய், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் கூடும் வாரச்சந்தைக்கு விற்பனை கொண்டு செல்லப்படும். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச், 25 முதல் ஊரட ங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கிராமப்புறங்களில் வாரச்சந்தைகள் கூட தடை உள்ளது. பல மாவட்டங்களில் நகர்ப்புற பகுதிகளிலும் மாலை, 6:00 மணிக்கு மேல் கடைகள் திறக்க அனுமதி இல்லை.

இதுகுறித்து, கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், செவிந்திப்பாளையம், அச்சமாபுரம், கடம்பங்குறிச்சி, நெரூர் உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆண்டுகளுக்கு முன், 150 க்கும் மேற்பட்ட தறிகளில் கோரைப்பாய் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, 50 க்கும் குறைவான தறிகளில் கோரைப்பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. 10 ஆண்டுகளாக, பல டிசைன்களில் கலர் கலரான பிளாஸ்டிக் பாய் விற்பனைக்கு வந்து விட்டதால், வெளிர் மஞ்சள் நிறமுடைய கோரைப்பாய்க்கு மவுசு குறைந்து விட்டது. இதனால், கோரைப்புல்லுக்கு கலர் போட வேண்டி, அதிக செலவு செய்ய வேண்டும். ஒரு தறியை ஏற்பாடு செய்ய, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. மின்சார கட்டணம், ஆட்கள் கூலி செலவு போன்றவற்றால் பெரிய அளவில் லாபம் இல்லை. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் கடந்த, நான்கு மாதங்களாக திருமணம், கோவில் திருவிழா உள்ளிட்ட சுப விசேஷங்கள் இல்லாததால், கோரைப்பாய் விற்பனையும் டல்லாக உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களில் கோரைப்பாயை கொண்டு சென்று, குறைந்தபட்சமாக, 100 ரூபாய் முதல், 250 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கிராமப்புறங்களில் வாரச்சந்தைகள் மீண்டும் கூடினால் மட்டுமே, கோரைப் பாய்க்கு உரிய விலை கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X