பொது செய்தி

தமிழ்நாடு

இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை மனு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை சப் - கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களை, மறுபரிசீலனை செய்து, முதல்வர் அறிவித்த காலிப்பணியிடங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டி, மனு அளித்தனர்.


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், 2019ல் நடந்த, இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, இறுதியில் அதிக மதிப்பெண்கள் அடிப்படையில், 8,538 பணியிடங்களுக்கு ஏற்ப காவலர்கள் நிரப்பப்பட்டனர், தொடர்ந்து, 2020-21ம் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறிய நிலையில், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு நிலை இருப்பதால், தற்போது தேவைப்படும் காவலர்களை, 2019ம் ஆண்டு நடந்த தேர்வில் எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவைகளில் பங்கேற்று ஓரிரு மதிப்பெண்களில் பணி நியமனம் பெறாத, எங்களுக்கு காவலர் பணி வழங்க வேண்டும் என, நான்கு பெண்கள் உட்பட எட்டு பேர் குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில், நேர்முக உதவியாளர் முருகனிடமும் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X