பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு 2,500 ரூபாய் ஊக்கத்தொகை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

குளித்தலை: கரூர் மாவட்ட, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் மணிமேகலை வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து வட்டாரங்களிலும் காய்கறி பயிரிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில், பயன்பெற விரும்பும் விவசாயிகள், காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதை, நடவு செடிகளின் விலை பட்டியல், ஆதார் எண், வயல் புகைப்படம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய விபரங்களை, அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக சாகுபடி செய்யும் பரப்பை பொறுத்து, இரண்டு ஹெக்டேர் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் விபரம் பெற, தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X