பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கரூர்: இறுதி வார முழு ஊரடங்கு காரணமாக, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று, கடைகள் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் ஓடாததால், கரூர் நகர பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த மார்ச், 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில், 34 வகையான தொழில் நிறுவனங்கள் இயங்கி கொள்ள, கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு மாதத்தில் ஞாயிற்று கிழமைகளில் மட்டும், முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என, தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, நடப்பு மாதத்தில் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, கரூர் நகரம், தென்னிலை, க.பரமத்தி, சின்னதாராபுரம், நொய்யல், புன்னம் சத்திரம், வேலாயுதம்பாளையம், வாங்கல், வெள்ளியணை, புலியூர், உப்பிடமங்கலம், வெங்கமேடு, பசுபதி பாளையம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் மருந்து கடைகளை தவிர, மற்ற கடைகள் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கரூர் நகராட்சி பகுதிகளில், மருத்துவமனைகளுக்கு சிலர், இருசக்கர வாகனங்களில் சென்றனர். அவர்களில், முககவசம் இல்லாமல் சென்றவர்களை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். கரூர் நகர பகுதி களில் எப்போதும், பரபரப்பாக இருக்கும், ஜவஹர் பஜார், காமராஜ் தினசரி மார்க்கெட், உழவர் சந்தை சாலை, கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில், ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. முக்கிய பகுதிகளில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X