கொரோனாவில் இருந்து மீட்சி: சரிவு ஏற்றமாகிறது; வாகன விற்பனை அதிகரிப்பு| Car sales shoot up during lockdown as auto industry struggles for momentum | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் இருந்து மீட்சி: சரிவு ஏற்றமாகிறது; வாகன விற்பனை அதிகரிப்பு

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (5)
Share
கோவை: கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின், பெருமளவில் சரிவடைந்திருந்த வாகன விற்பனை மீண்டும் மெதுவாக சூடு பிடித்து வருகிறது. இது கொரோனாவில் இருந்து மீட்சியாக கருதப்படுகிறது. கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது. இதில் முதல் முறை மட்டுமே கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அடுத்த முறையில் இருந்து
vehicle sales, car sales, coronavirus, covid 19 lockdown, coronavirus lockdown, வாகன விற்பனை, சரிவு, பதிவு,

கோவை: கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின், பெருமளவில் சரிவடைந்திருந்த வாகன விற்பனை மீண்டும் மெதுவாக சூடு பிடித்து வருகிறது. இது கொரோனாவில் இருந்து மீட்சியாக கருதப்படுகிறது.

கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது. இதில் முதல் முறை மட்டுமே கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அடுத்த முறையில் இருந்து ஒவ்வொரு கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதும் தளர்வுகளும் அதிகமாக்கப்பட்டுள்ளது.இதனால் கொரோனா பரவுவது குறையவில்லை என்றாலும், அதல பாதாளத்திற்குச் சென்ற பொருளாதார நிலைமை கொஞ்சம் தலைதுாக்க ஆரம்பித்துள்ளது.


latest tamil newsவாகன விற்பனையில், கோவை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு துவங்கிய பின், வாகன விற்பனை மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.கடந்த ஆண்டை ஒப்பிட்டால் நான்கில் ஒரு பங்கு கூட விற்பனை நடக்காத நிலையில், மோட்டார் வாகன விற்பனையாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் சித்திரைப் பிறப்பையொட்டி, புதிய வாகனங்கள் விற்பனை நன்கு சூடுபிடிக்கும். ஆனால் இந்த ஆண்டில் ஏப்ரலில் ஒட்டுமொத்தமாக கடைகள் அனைத்தும் மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

மே மாதத்திலிருந்து வாகன விற்பனை துவங்கினாலும், பெரியளவில் விற்பனை நடக்கவில்லை. ஆனால் ஜூன் மாதத்தில் கொஞ்சம் விற்பனை அதிகரித்து நம்பிக்கை ஊட்டியது. இருப்பினும் ஏராளமானவர்களுக்கு வேலை மற்றும் தொழில் இழப்பு காரணமாக பணப்புழக்கம் பெருமளவில் குறைந்திருப்பதால் ஜூலையிலும் அதே அளவிலேயே வாகன விற்பனை நீடிக்கிறது. பெரியளவில் விற்பனை அதிகரிக்கவில்லை.

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, மையம் மற்றும் மேற்கு என நான்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை ஆகிய நகரங்களில் மூன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் செயல்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, கோவை தெற்கு அலுவலகத்துக்குட்பட்ட ஒரு யூனிட் அலுவலகம் சூலுாரில் உள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் கடைசி ஒரு வாரம் மட்டுமே, ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. அந்த மாதத்தில் கோவை மாவட்டத்தில் 8,057 இரு சக்கர வாகனங்கள், இதர வாகனங்கள், 3,187 என மொத்தம், 11 ஆயிரத்து 244 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏப்ரலில் சுத்தமாக விற்பனையில்லை. மே மாதத்தில் மாவட்டம் முழுவதுமே 2,003 இரு சக்கர வாகனங்கள், இதர வாகனங்கள் 424 என, 2,427 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதை பதிவு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

மே மாதத்தில் வால்பாறையில் ஒரு கார் கூட பதிவாகவில்லை. ஜூனில் இந்த விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த மாதத்தில் 6,873 இரு சக்கர வாகனங்கள், 1,519 கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்கள் என மொத்தம், 8,392 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூலையில், முதல் 10 நாட்களிலேயே 1,933 டூ வீலர்கள், 457 இதர வாகனங்கள் என 2,390 வாகனங்கள் பதிவுக்கு வந்துள்ளன. அடுத்த மாதத்திலிருந்து வாகன விற்பனை மீண்டும் அதிகரிக்குமென்று வாகன விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X