கரூர் அருகே மோசமான சாலை: தொடரும் பொதுமக்கள் அவதி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் வெள்ளியணை, பாளையம் வழியாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், விபத்துகளை தடுக்க, சாலையின் இருபக்கமும், விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய சாலை அமைக்கப்பட்டது. ஆனால், விரிவாக்க சாலைகள் பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. குறிப்பாக, வெள்ளியணை சாலை, வெங்ககல்பட்டி பகுதியில், மேம்பாலத்துக்கு செல்லும் சாலைகள், தற்போது போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் மோசமாக காட்சி தருகிறது. நாள்தோறும் இரவு நேரத்தில், கரூரில் இருந்து வெள்ளியணை, பாளையம் பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்கள், குண்டும் குழியுமான சாலையில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். இதனால், கரூர்-வெள்ளியணை சாலை வெங்ககல்பட்டி பகுதியில் உள்ள விரிவாக்க சாலையை, உடனடியாக சீரமைக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X