அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: காங்கிரசார் கைது

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் அரசியல் நிலையை கண்டித்து சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மை சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்று வரும் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியின் மூலம் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.,வை
congress, rajasthan, Rajasthan political crisis, chennai news, காங்கிரஸ், கவர்னர், மாளிகை, முற்றுகை, கைது

சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் அரசியல் நிலையை கண்டித்து சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மை சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்று வரும் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியின் மூலம் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.,வை கண்டித்து சென்னை, கிண்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகை முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று (ஜூலை 27) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


latest tamil news
அதன்படி, கிண்டியில் கவர்னர் மாளிகையை நோக்கி மாநில தலைவர் அழகிரி தலைமையில் பேரணியாக சென்றனர். இந்த ஆர்பாட்டத்தில் செயல்தலைவர்கள் வசந்தகுமார், ஜெயக்குமார், மாவட்ட தலைவர்கள், சிவராஜசேகரன், திரவியம்,மற்றும் டில்லி பாபு, காண்டீபன் , கோபி, பீச்பாலச்சந்தர் , உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
இவர்கள் சைதாப்பேட்டை ராஜிவ் சிலை அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து தொண்டர்கள் ஆர்பாட்டம் செய்தனர். மேலும் கவர்னர் மாளிகை நோக்கி செல்ல முயன்றனர், இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
28-ஜூலை-202015:52:20 IST Report Abuse
s.rajagopalan பலர் , முக கவசம் அணியவில்லை ...இதற்கு அழகிரி மேல் வழக்கு போட .வேண்டும் ..ஒன்று நிச்சயம் ,,,அழகிரி அகில இந்திய தலைவர் ...இவர் நிகழ்த்திய அணியை கண்டு பி ஜெ பி அரண்டு போயிருக்கலாம் ...மோடி ராஜஸ்தான் அரசியலில் இனி தலையிட மாட்டார் ...என்று நம்புவோம்...இல்லை இல்லை ...கனவு காண்போம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
27-ஜூலை-202020:11:42 IST Report Abuse
Endrum Indian சட்டம் "கண்டேன் சுட்டேன் " வந்தால் எல்லா டப்பா ஓசையும் அடங்கி விடும்
Rate this:
Cancel
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
27-ஜூலை-202019:25:52 IST Report Abuse
Davamani Arumuga Gounder '' அரெஸ்ட் செய்வார்கள்.. ஊடகங்களில் நம் போட்டோ, பெயர்கள் எல்லாம் வரும்.. ஆனாலும், மாலையில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் '' என்ற அந்த ஒரே தைரியம் மட்டுமே இப்போது பலபேருக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X