உடுமலை:
செவ்வாய் கிரகத்துக்கு பெயர்களை அனுப்பியது தொடர்பாக, பதிவு சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.'நாசா' சார்பில், ஜூலை 30ம் தேதி, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் விண்கலத்தில், பொதுமக்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கான, பதிவு சீட்டுகள் இணையதளத்தில் நாசா வெளியிட்டுள்ளது. https://go.nasa.gov/Mars2020 என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து, பதிவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறுகையில், ''கடந்தாண்டு பதிவு செய்யாதவர்களுக்கு நாசா மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆய்வுகளை மேற்கொள்ள, 2026ம் ஆண்டு மீண்டும் விண்கலன்களை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் பெயர்களை பதிவு செய்ய, http://mars.nasa.gov/participate/sen-t--your-name/future என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE