பொது செய்தி

இந்தியா

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Pubg, App, india, apps banned, பப்ஜி, சீனா, செயலிகள், ஆப்கள், தடை, மத்திய அரசு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்கனவே 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், மேலும் 275 சீன செயலிகள் தடை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் கடந்த மாதம் டிக்டாக், கேம் ஸ்கேனர், ஷேர்இட், யூசி பிரவுசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகள் மீது மத்திய அரசு தடை விதித்தது. இதனைதொடர்ந்து மேலும் சில செயலிகளுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், முன்னதாக தடை செய்யப்பட்ட செயலிகளின் 47 ‛க்ளோன்' செயலிகளுக்கும் கடந்த ஜூலை 24ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது.


latest tamil news



அதாவது டிக்டாக் லைட், கேம் ஸ்கேனர் அட்வான்ஸ் உள்ளிட்ட செயலிகளும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பப்ஜி, ரெஸ்ஸோ உள்ளிட்ட செயலிகளும் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூலை-202020:41:58 IST Report Abuse
Bhaskaran பாப்ஜி தடைசெய்தால் பஜ்ஜியை தடை செய்ததாக தளபதி போராட்டம் நடத்தப்போகிறார்
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
27-ஜூலை-202020:09:25 IST Report Abuse
Siva வெட்கமில்லையா சூடு சொரணையில்லையா ஏய் தடியா உன்னை தாண்டா வாடா வந்து விளையாடுடா என்று அழைத்து sms அனுப்புவதை நிறுத்த என்ன செய்வது?. எத்தனை முறை block லிஸ்டில் சேர்த்தாலும் புதிது புதிதாக மீண்டும் மீண்டும் sms வருது..
Rate this:
Cancel
sudharman - chennai,இந்தியா
27-ஜூலை-202019:45:25 IST Report Abuse
sudharman தடை செய்வது நல்லது தான். நேரம், பணம், மனம், உடலுக்கு நல்ல விஷயம் தடை செய்தல். அதே சமயம் இன்னொன்றை கவனிக்கவும். ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகள் தரவிறக்கம் செய்ய முடிகிறது. எம்ஐ செயலிகள் செய்து பார்த்தேன். டவுன்லோட் ஆகிறது. உடனே கேட்காதீர்கள். ஏன் செய்தாய் என்று. டெஸ்ட் செய்தேன். இப்படி பல செயலிகள் இன்னும் இயங்குகிறது. டௌன்லோடும் ஆகிறது. தடையை மிக சரியாக உறுதியாக செய்யுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X