அமெரிக்காவின் செயல் பிற நாடுகளையும் தூண்டிவிடும்; எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Armed Drones, Donald Trump, trump, missile, agreement, அமெரிக்கா, ஏவுகணைகள்,டிரோன், பொருளாதாரம்

வாஷிங்டன்: 1987ம் ஆண்டு ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு 35 நாடுகளிடம் ஓர் ஒப்பந்தமிட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா, அதன் 35 நட்பு நாடுகளுக்கு ஏவுகணைகள் மற்றும் அதனை சார்ந்த போர் கருவிகளை விற்பனை செய்யாது என கையெழுத்திட்டது.

உலக சமாதானம் மற்றும் ஏவுகணை தடுப்புக்காக இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. உலகில் எந்த நாடும் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை செய்யக்கூடாது என்னும் கொள்கையை வலியுறுத்தும் வகையிலேயே உலக நாடுகள் இந்த முடிவை ஒருமனதாக ஏற்றனர். இதனால் உலகின் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் ஏவுகணை பயன்படுத்தப்படாது என உறுதி அளிக்கப்பட்டது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை உடைக்கும் சட்டத்தை நிறைவேற்றி உள்ளார். இது உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.


latest tamil newsஇதனால் அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுக்கு ஏவுகணை மற்றும் அதிநவீன போர் கருவிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியும். உலக சமாதானத்தை விரும்பும் பிற நாடுகளிடையே அமெரிக்காவின் இச்செயல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாம் உலகப் போரை அடுத்து கொண்டுவரப்பட்ட இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு மீறி செயல்படுத்துவது அராஜகத்தின் உச்சம் என பல நாடுகள் கருதுகின்றன.

'ஆர்ம்ட் ட்ரான்ஸ்' எனப்படும் போர்களில் பயன்படுத்தப்படும் கருவி தற்போது அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கருவியில் சில கட்டுப்பாடுகளை பின்பற்றி செயல்படவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதாவது மணிக்கு 800 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆர்ம்டு ட்ரோன்கள் மிகவும் ஆபத்தானவை. இவை போர்களில் மட்டுமே பயன்படுத்தப்படும். தற்போது அமெரிக்கா பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆர்ம்டு ட்ரோன்கல் 800 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறைவாகவே செல்லும் அளவுக்கு அதன் வேகத்தைக் குறைக்க வேண்டும் என ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.


latest tamil newsஇதன்மூலம் அமெரிக்கா தனது போர் கருவிகள் தயாரிக்கும் வர்த்தகத்தை பெருக்க முயல்கிறது. ஆனால் நிலைமை இவ்வாறு சென்றால், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் இந்த ட்ரோன் தயாரிப்பில் ஈடுபடத் துவங்கும். அமெரிக்கா தவிர பிற வல்லரசு நாடுகளும் இந்த கருவிகளை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்தால் உலக நாடுகளிடையே போர் மூளும் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
28-ஜூலை-202019:33:30 IST Report Abuse
mathimandhiri அன்று நேரு இந்தியா அணி சேராக் கொள்கையில் உறுதியாய் இருக்கும், அணி சேர்தல் உலக அமைதிக்கு உகந்ததல்ல என்று அமெரிக்கா சென்ற பொது முழங்கினார். என்ன ஆயிற்று/? இந்ததோ சீனி பாய் பாய் என்று சொல்லி வாய் மூடுவதற்குள் சீனாக் காரன் இமயத்தின் மீது சாலை போட்டு முடித்து உள்ளே வந்து நம்மை துவம்சம் செய்து விட்டுப் போனான். பெரிய அளவில் ஏன், மானசீகமான ஆதரவு கூட நமக்கு கிடைக்க வில்லை.இப்போது அதே சீனாக் காரனை ஒடுக்க உலக நாடுகள் நம்மோடு இணைய தாமாகவே முன் வருகின்றன. இது இந்திய அரசின் வெளி நாட்டுக்கு கொள்கைக்கு கிடைத்த வெற்றி. அணி சேராமை போன்றவை எல்லாம் இன்று வேலைக்கு ஆகுமா?
Rate this:
Cancel
27-ஜூலை-202018:48:58 IST Report Abuse
ராஜ் லாஜிக்கெல்லாம் சரியாதான் இருக்கு ஆனா பிராக்டிகாலிட்டி அப்பிடி இல்லையே? 1987க்கும் 2020க்கும் நெறைய வித்தியாசம் இருக்கே? சீனனையும், வடகொரியனையும் எப்பவுமே நம்ப முடியாது, பக்கத்து பயங்கரவாத தொழிற்சாலையை எப்பவுமே கவனிக்க வேண்டியதா இருக்கு. உள்நாட்டு துரோகிகளையும் கண்டுபுடிகிச்சு கள எடுக்கணும். எப்பிடி ஆயுதமில்லாம இருக்க முடியும்? அப்புறம் சாவ வேண்டியது தான்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
27-ஜூலை-202018:45:58 IST Report Abuse
S. Narayanan இவை எல்லாம் சீனாவுக்கு எதிரானவையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X