சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

முககவசம் பாதுகாப்பானதா

கொரோனாவை தடுப்பதில் முககவசம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பல வகைகள் உள்ளன. வீட்டில் தயாரிக்கப்படும் முககவசம் மூன்றடுக்கு அல்லது குறைந்தது இரண்டடுக்காகவாது இருக்க வேண்டும். அதுதான் வைரஸ் பரவாமல் தடக்கும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. எல்.இ.டி., லைட்டிங் சிஸ்டம், அதிவேக கேமரா மூலம் ஆய்வு நடத்தியதில் கொரோனா பாதித்த ஒருவரின் தும்மல், இருமல், பேசும் போது வெளிப்படும் நீர்த்திவலைகளை இரண்டடுக்கு முககவசம் தான் தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்: முதல் வழக்கறிஞர்

வழக்கறிஞர், பத்திரிகையாளர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்ட பெண்மணி வயலட் ஆல்வா. 1908 ஏப்., 24ல் ஆமதாபாத்தில் பிறந்தார். சட்டம் படித்த இவர், மும்பையில் உள்ள இந்திய பெண்கள் பல்கலையில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றினார். இந்தியாவில் 1944ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வாதாடிய முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமை பெற்றவர். காங்., கட்சியை சேர்ந்த இவர், 1952 - 60 வரை கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 1962 - 1969 வரை ராஜ்யசபா துணை தலைவராக பதவி வகித்தார். 1969ல் மறைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X