பொது செய்தி

இந்தியா

கிராமத்தை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு 10ம் வகுப்பு மாணவன் கடிதம்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
கொச்சி: கொரோனா வைரஸ், கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடும்பத்திற்கும், கிராமத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என கேரளாவை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் ஒருவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் கடலோரத்தில் அமைந்துள்ள கிராமம் செல்லனம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் எடக்ர் செபாஸ்டியன். அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம்
kerala, coronavirus, sea erosion, covid 19, ram nath kovind, கேரளா, செல்லனம், 10ம்வகுப்பு, மாணவன், ஜனாதிபதி, ராம்நாத், ராம்நாத்கோவிந்த், கொரோனா, கொரோனாவைரஸ், கடல் அரிப்பு

கொச்சி: கொரோனா வைரஸ், கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடும்பத்திற்கும், கிராமத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என கேரளாவை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் ஒருவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் கடலோரத்தில் அமைந்துள்ள கிராமம் செல்லனம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் எடக்ர் செபாஸ்டியன். அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு ஏற்பட்டு வரும் கடல் அரிப்பால் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், செபாஸ்டியன் குடும்பத்தினரும் ஒருவர்.


latest tamil newsஇதனையடுத்து, ஜனாதிபதி ராம்நாத்திற்கு, அந்த மாணவன் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

எனது கிராமம் செல்லனம், பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. உதவி செய்ய யாரும் இல்லை. பயம் காரணமாக, இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். எனக்கு, நினைவு தெரிந்தது முதல், ஆண்டிற்கு இரு முறை என்னையும், எனது சகோதரனையும் அழைத்து கொண்டு பெற்றோர் வேறொரு இடத்திற்கு ஓடுகின்றனர்.

கடல் அரிப்பு, மழை காலங்களில், கடல் தண்ணீர் எங்களது வீட்டிற்குள் வந்துவிடும். இந்த ஆண்டு ஜூலை 16 முதல் கடல் அரிப்பு ஏற்பட துவங்கியது. வழக்கம் போல் உறவினர் வீட்டிற்கு செல்லலாம் என நினைத்தாலும், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் முடியவில்லை.

எங்களது கிராமத்தை காக்க கடலோரத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என, கிராமத்தினர் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திவிட்டோம். ஆனால், உதவி செய்ய யாரும் இல்லை. கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. 400க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் 6 வீடுகள் இடிந்து விட்டது. வீட்டில் இருந்த பொருட்களுடன், நானும், எனது நண்பர்களும் புத்தகங்களையும் இழந்துவிட்டோம். பருவமழை துவங்கிவிட்டதால், மீண்டும் கடல் அரிப்பு ஏற்படும். இந்திய எல்லையில் ஒன்றான, அரபிக் கடல் பகுதியில் படித்து வருகிறேன்.

எல்லைகளை காக்க வேண்டிய கடமை உங்களுக்கு உங்களுக்கு உள்ளது என நம்புகிறேன். எனது கடைசி நம்பிக்கையும் நீங்கள் தான். இதனால், இந்த விவகாரத்தில், நீங்கள் தலையிட்டு, கடல் சுவர் அமைக்க உதவுவதுடன், எங்களையும் காப்பாற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் செபாஸ்டியன் கூறியுள்ளார்.

இந்த கடிதத்திற்கு, ஜனாதிபதியிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. எனினும், தனது கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என அந்த மாணவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
28-ஜூலை-202022:28:01 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். உடனடியாக இது சம்பந்தமான துரைறையை தொடர்புகொண்டு ஆவன செய்ய வேண்டும் மேன்மைதாங்கிய ஜனாதிபதி அவர்கள்.
Rate this:
Cancel
27-ஜூலை-202021:02:47 IST Report Abuse
ஆப்பு எதிரிகளுக்கு ஒரு அங்குலம் கூட விட்டுக் குடுக்க மாட்டோம்னு பேசுறவங்களுக்கு கடிதம் எழுதணும் தம்பி.... ஆனா, கடல் நமது நண்பனா எதிரியான்னு தெரியலியே...
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
27-ஜூலை-202019:58:30 IST Report Abuse
Visu Iyer பிரதமருக்கு எழுதாமல் ஜனாதிபதிக்கு எழுதி இருக்கிறார் என்றால்.. இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பது புரிகிறதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X