கனடாவில் சீன அரசுக்கெதிராக ஆசிய நாடுகள் அமைப்பினர் போராட்டம்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
Protest, Asian Countries, China, canada, போராட்டம், சீனா, எதிராக, ஆசியா, நாடுகள்

ஒட்டோவா: வேன்க்வோர் ஆர்ட் கேலரி கனடாவில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற சிற்பங்கள் ஓவியங்கள் உள்ளிட்ட கலைப் பொருட்கள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும். இது அந்நாட்டில் உள்ள சீன தூதரகத்தின் மிக அருகிலேயே உள்ளது. இங்கு தற்போது சீனாவுக்கு எதிராக ஆசிய அமைப்பினர் போராட்டம் நடத்தி உள்ளனர். சமீபத்தில் சீனா, ஹாங்காங்கில் தனது தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த முயன்றது.

இதேபோல தைவான், திபெத் உள்ளிட்ட நாடுகளை சீன கம்யூனிச அரசு தன்வசப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து பிலிப்பைன்ஸ், இந்தியா, சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கனடாவில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்கள் அமைப்புகள் சார்பாக சீன கம்யூனிச அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அமைதியான வழியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு ஆசிய அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் கல்வன் பகுதியில் சீன ராணுவம் இந்திய ராணுவத்திடம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனை எதிர்த்து இந்திய அமைப்புகள் இந்த பேரணியில் குரல் கொடுத்தன.


latest tamil news



இதேபோல சீனா தொடர்ந்து பூட்டான், திபெத் உள்ளிட்ட நாடுகளுடன் எல்லை பிரச்னையில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக டொரண்டோவில் சீன கம்யூனிச அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது கனடாவிலும் இந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான ஆசிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் கலந்துகொண்டனர்.

அரசின் சம்மதத்தோடு நடைபெறும் இந்த பேரணியில் பல சமூக ஆர்வலர்கள் உரையாற்றினர். ஏற்கனவே சீனாவுக்கும் கனடாவுக்கும் சில விஷயங்களில் மோதல்போக்கு உண்டானது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டு வான்ஹூ என்ற ஹுவே தொழில்நுட்ப நிறுவன வர்த்தக தலைவர் கனடா அரசால் அமெரிக்கா வாரண்ட் கொண்டு கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, சீனாவில் குடியிருக்கும் கனடாவைச் சேர்ந்த தூதரான மிக்கேல் கொவாரி மற்றும் மிக்கேல் ஸ்போர் உள்ளிட்டவர்களைக் கைது செய்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X