பிரேசிலில் 66% பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்| Brazil: 66% people recover from coronavirus | Dinamalar

பிரேசிலில் 66% பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
பிரேசிலியா: பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட, 24 லட்சம் பேரில் 16.3 லட்சத்துக்கும் அதிகமானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. இதில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள நாடு பிரேசில்

பிரேசிலியா: பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட, 24 லட்சம் பேரில் 16.3 லட்சத்துக்கும் அதிகமானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



latest tamil news




சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. இதில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள நாடு பிரேசில் தான். 'கொரோனா பரவலின் மையமாக பிரேசில் விளங்குகிறது' என, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 24,578 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; 500க்கும் அதிகமானோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



பிரேசிலில் இதுவரை 24,19,091 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 87,004 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், கொரோனா பாதிப்புக்குள்ளாளன 16.3 லட்சத்துக்கும் அதிகமானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது 66.6 சதவீதம் பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையை விட, குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது' என, பிரேசில் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X