கேரளாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
காசர்கோடு: கேரளாவின் காசர்கோடு அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மணப்பெண், மணமகன் உள்பட 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.கேரள மாநிலம் காசர்கோடு செங்கலா அடுத்த பிலங்கட்டா கிராமத்தில் கடந்த 17ம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் 125க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Kerala, Wedding Guests, COVID-19, Kasargod, coronavirus, kerala news, கேரளா, திருமணம், நிகழ்ச்சி, கொரோனா, மணப்பெண், மணமகள், பாதிப்பு

காசர்கோடு: கேரளாவின் காசர்கோடு அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மணப்பெண், மணமகன் உள்பட 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு செங்கலா அடுத்த பிலங்கட்டா கிராமத்தில் கடந்த 17ம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் 125க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி உள்ளது. ஆனால் அரசின் கட்டுப்பாட்டை மீறி அதிகமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 125 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மணப்பெண், மணமகன் உள்ளிட்டோரும் கொரோனா தொற்றுக்கு தப்பவில்லை.


latest tamil news


இதனையடுத்து, மணப்பெண்ணின் தந்தை மீது கேரள தொற்றுநோய் அவசர சட்டத்தின் கீழ் பதியுடுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காசர்கோடு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதிகளை மீறியது கண்டறியப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படலாம். மணப்பெண்ணின் தந்தைக்கு தான் முதன்முதலில் கொரோனா தொற்று உறுதியானது. பெண்ணின் தந்தையும், மணமகனும் சில மாதங்களுக்கு முன்பு தான் துபாயில் இருந்து கேரளா வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் 14 நாட்கள் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறி இருப்பவர்கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காசர்கோடு, மஞ்சேஸ்வரம், ஹோஸ்டர்க், கும்பாலா, நிலேஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. எந்த பொது போக்குவரத்தும் இங்கு அனுமதிக்கபடவில்லை. கேரளாவில் ஒருநாளைக்கு சுமார் 20 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூலை-202020:36:56 IST Report Abuse
Krishna Indha Kalyanam moorga kotathin Kalyanam.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
27-ஜூலை-202020:17:30 IST Report Abuse
duruvasar கேரள அரசு மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலே சிறப்பாக செயல்படுகிறது என கமல்ஹாசன் புகழாரம். இதே கருத்தை சீமான் அவர்களும் ஆமோதித்தார்.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
27-ஜூலை-202020:09:27 IST Report Abuse
Loganathaiyyan கேரளா - கம்ம்யூனிஸ்ட் - பினராயி விஜயன் - பப்பு தி கிரேட் - வயநாடு - முஸ்லிம்கள் - கிறித்துவர்கள் இது போதும் கொரோன தேசம் என்று சொல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X