ரபேல் போர் விமானங்கள் இந்தியா கிளம்பியது; 29ம் தேதி வந்து சேர்கிறது| IAF to induct 5 Rafale fighter jets on July 29 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரபேல் போர் விமானங்கள் இந்தியா கிளம்பியது; 29ம் தேதி வந்து சேர்கிறது

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (12)
Share
பாரீஸ்: அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியா கிளம்பியது. இந்த விமானங்கள் நாளை மறுநாள்( ஜூலை 29) அம்பாலா விமானப்படை தளத்தை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சின் மெரிக்னாக் விமானப்படை தளத்தில் இருந்த கிளம்பிய விமானத்தை, அந்நாட்டிற்கான இந்தியதூதர் அனுப்பி வைத்தார்.பிரான்சில் இருந்து கிளம்பிய 5 விமானத்தில், ஒரு கமாண்டிங் ஆபிசர்
Rafale fighter jets, france, india, IAf, air force, ரபேல், பிரான்ஸ், இந்தியா, விமானப்படை,

பாரீஸ்: அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியா கிளம்பியது. இந்த விமானங்கள் நாளை மறுநாள்( ஜூலை 29) அம்பாலா விமானப்படை தளத்தை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சின் மெரிக்னாக் விமானப்படை தளத்தில் இருந்த கிளம்பிய விமானத்தை, அந்நாட்டிற்கான இந்தியதூதர் அனுப்பி வைத்தார்.

பிரான்சில் இருந்து கிளம்பிய 5 விமானத்தில், ஒரு கமாண்டிங் ஆபிசர் உட்பட 5 இந்திய விமானிகள் உள்ளனர். அவர்களுக்கு, போர் விமானத்தை தயாரித்த டசால்ட் ஏவியேசன் நிறுவனம் பயிற்சி அளித்தது. கடந்த 2016 ல் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில், பயிற்சி குறித்தும் இடம்பெற்றிருந்தது.

பிரான்சில் இருந்து கிளம்பிய, இந்த விமானங்கள், ஐக்கிய அரபு எமீரேட்சில் உள்ள பிரான்ஸ் தளத்தில் தரையிறக்கப்படும். அங்கு கிரீஸ் அல்லது இஸ்ரேலில் இருக்கும் பிரான்ஸ் விமானப்படை விமானங்கள் மூலம் எரிபொருள் நிரப்பப்பட்டு, பின்னர், 29ம் தேதி காலை ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தை வந்தடையும்.


latest tamil news





வானில் இருந்தும் தாக்கும்


ரபேல் விமானங்கள், முதலில் மே மாத இறுதியில் இந்தியா வந்தடையும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நிலவிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அது தள்ளிப்போனது. வானில் இருந்து வானிலும், வானில் இருந்து தரையிலும் உள்ள இலக்குகளை ரபேல் விமானங்கள் தாக்கும் திறன் கொண்டது. இதனை, பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகள் ஈடு செய்ய முடியாது. ரபேல் விமானங்கள் வருகையால், இந்திய விமானப்படை பலம் பெறும் என , விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரபேல் போர் விமானங்களில், பொருத்துவதற்காக பிரான்ஸிடமிருந்து ஹம்மர் ஏவுகணைகளையும் வாங்க இந்திய விமானப்படை வாங்குகிறது. இதற்கு பிரான்ஸ் அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. . ஹம்மர் ஏவுகணைகள் பிரான்ஸ் நாட்டின் விமானப்படை மற்றும் கடற்படைக்காக நடுத்தர தொலைவில் உள்ள இலக்கை தாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 60 முதல் 70 கி.மீ., வரை தரையில் உள்ள இலக்கை. வானில் இருந்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X