பிரச்னை கிளப்பும் புத்தகம்

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர். அமைதியாக தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் இவர் மீது, பிரதமர் மோடிக்கு அதிக நம்பிக்கை.அமைச்சர் ஆவதற்கு முன், ஐ.எப்.எஸ்., அதிகாரியாக, வெளியுறதுத்துறை செயலராகவும் பணியாற்றியவர், இவர். தன் பல ஆண்டுகால அனுபவங்களை, புத்தகமாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் விரைவில் வெளியாக உள்ளதாம். ஜனாதிபதி
 பிரச்னை கிளப்பும் புத்தகம்

வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர். அமைதியாக தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் இவர் மீது, பிரதமர் மோடிக்கு அதிக நம்பிக்கை.அமைச்சர் ஆவதற்கு முன், ஐ.எப்.எஸ்., அதிகாரியாக, வெளியுறதுத்துறை செயலராகவும் பணியாற்றியவர், இவர். தன் பல ஆண்டுகால அனுபவங்களை, புத்தகமாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் விரைவில் வெளியாக உள்ளதாம். ஜனாதிபதி வெளியிட, பிரதமர் மோடி முதல் புத்தகத்தை பெற்றுக் கொள்வாராம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தாலும், இதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பும் வெளியாக இருக்கிறது. இந்த புத்தகத்தில், இந்தியா - -இலங்கை தொடர்புகள்; இலங்கையில் நடைபெற்ற பிரச்னைகள்; அதை எப்படி இந்தியா கையாண்டது; அரசியல்வாதிகள் எப்படி நடந்து கொண்டனர் என, பல விவரங்களை, வெளிப்படையாக எழுதியுள்ளாராம், ஜெய்சங்கர். இது காங்கிரசுக்கு தமிழகத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என, ஜெய்சங்கருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, காங்., தலைமை இலங்கை விஷயத்தில் போட்ட இரட்டை வேடம் வெளியாகும் என்கின்றனர். இன்னொரு பக்கம், 'தி.மு.க.,விற்கு இதனால் பிரச்னைகள் வரும்; இந்த புத்தகம் வெளியானதும் தமிழக அரசியலில் மாற்றங்கள் நடந்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை' என்கின்றனர், விஷயம் தெரிந்தவர்கள்.


சச்சினின் சட்ட நண்பர்டில்லியில், இரண்டு வாரமாக அரசியல் பரபரப்பை அதிக மாக்கிக் கொண்டிருப்பது, ராஜ்ஸ்தான் விவகாரம் தான். மாறி மாறி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இந்த பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது; இன்னொரு பக்கம் கவர்னர் மாளிகையில் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா என, உச்சகட்ட அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை பாதிக்கும் பிரச்னைகளை அனைவரும் மறந்துவிட்டு, அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சச்சின் பைலட்டிற்கு, சட்ட ரீதியாக நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க உதவிக் கொண்டிருப்பவர், டில்லி தமிழ் வழக்கறிஞர் ஹரிஹரன்; ௩௫ வயது இளைஞர். டில்லி தமிழ் பள்ளியில் படித்து, மிகவும் பிரபலமான செயின்ட் ஸ்டீபன் கல்லுாரியில் படித்தவர். இந்த கல்லுாரியில் இடம் கிடைப்பது மிகவும் கடினம். அதைத் தொடர்ந்து, டில்லியிலேயே சட்டபடிப்பையும் முடித்தவர். ராஜஸ்தான் தொடர்பான வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான இவருக்கு, துணை முதல்வரக இருந்த சச்சினுடன் தொடர்பு ஏற்பட்டு, பின் நட்பு நெருக்கமானது. இப்போது சச்சின் பைலட்டின் வழக்குகளை ஹரிஹரன் கவனித்து வருகிறார்.சீனியர் வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ஹரீஷ் சால்வே ஆகியோரை அணுகி, சச்சினுக்கு வாதாடுமாறு ஏற்பாடு செய்தவர், இந்த ஹரிஹரன். இவருடைய முயற்சியாலும், சீனியர் வழக்கறிஞர்களின் வாதாடும் திறமையாலும், உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் இதுவரை சச்சினுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வந்துள்ளன.


சானிடைசர் கவர்னர்


தினமும் பரபரப்பான செய்தியை தந்து கொண்டிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் கவர்னராக இருப்பவர், கல்ராஜ் மிஸ்ரா. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். மோடி அரசில், அமைச்சராக இருந்தவர். அதிக வயதாகி விட்டதால், தற்போதைய மத்திய அரசில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதனால், இவரை கவர்ன ராக்கி விட்டனர். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நெருக்கமானவர் என்பதால், கல்ராஜ் மிஸ்ரா மீது மோடிக்கு தனி மரியாதை. ராஜஸ்தான் முதல்வர் கெலாட், இப்போது, கல்ராஜ் மிஸ்ராவை அடிக்கடி சந்தித்து வருகிறார். எப்போது முதல்வர் வந்தாலும், அவர் கையில், கவர்னரே சானிடைசர் தெளிக்கிறார். மற்ற கவர்னர்கள் போல் தாமதம் செய்யாமல், முதல்வர் எப்போது நேரம் கேட்டாலும், உடனே ஒப்புக் கொண்டு சந்திக்கிறார். தனக்கு எதிராக கெலாட் பேசி வந்தாலும், விரோதம் பாராட்டாமல், அவரை சந்திக்கிறார், கல்ராஜ் மிஸ்ரா. இவருக்கு எப்போதும் கோபமே வராதாம். வாஜ்பாயுடன் நெருக்கமாக இருந்ததால், அவரைப் போலவே எப்போதும் சிரித்த முகத்துடனே காணப்படுகிறார். காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் மாளிகைக்கு வந்து, கல்ராஜ் மிஸ்ராவுக்கு எதிராக கோஷமிட்ட போதும், கோபம் இல்லாமல் அனைவரையும் சந்தித்தார்.இவருடைய மனதில் என்ன ஓடுகிறது என்பதை, இவரது முகம் காட்டிக் கொடுக்காது. அடுத்தாக என்ன செய்யப்போகிறார் என்பதை, வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். பல முறை, முதல்வர் அசோக் கெலாட் இவரைச் சந்தித்தாலும், கவர்னர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், கவர்னரே சானிடைசரை தெளித்து வரவேற்கும் போது, ஒன்னுமே புரியவில்லை என, குழம்பி போகிறார் முதல்வர். முதல்வர், கவர்னர் இருவருமே அரசியலில் கரைகண்ட மூத்த தலைவர்கள் என்பதால், யாரிடம் என்ன வியூகம் என்பது, சக அரசியல்வாதிகளுக்கு புதிராகவே தொடர்கிறது.


ராகுலின் சந்தேகம்


சென்னையில் தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்தி பவன் மற்றும் தேனாம்பேட்டையில் கட்சிக்கு சொந்தமான இடம் தொடர்பாக பரபரப்பான செய்திகள் அடிபடுகின்றன. இந்த இடங்களில், மாபெரும் வளாகம் கட்ட, ராகுல் ஆசைப்படுகிறார் என, சொல்லப்படுகிறது.இந்த விவகாரத்தில் ஊழல் நடக்கிறது என்கின்றனர், சில காங்கிரசார். சமீபத்தில் இது தொடர்பாக, ஒரு பிரபல ஆடிட்டர், 'டுவிட்' செய்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு தமிழக காங்., தலைவர், மறுப்பும் தெரிவித்தார்.இந்த விஷயம், ராகுலை பெரிதும் பாதித்துள்ளதாம். காங்கிரசைச் சேர்ந்தவரும், தமிழக காங்., டிரஸ்ட்டின் அங்கத்தினருமான ஒருவர் தான், அந்த ஆடிட்டரைச் சந்தித்து, உள் விவகாரங்களைப் போட்டுக் கொடுத்துவிட்டார் என, சந்தேகிப்பதோடு, அவர் மீது கோபமாகவும் இருக்கிறாராம் ராகுல்.'சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் எப்படி வெளியானது; இதன் பின்னணியில் இருப்பது யார்' என்பது குறித்து விசாரிக்குமாறு, தன் அந்தரங்க ஆலோசகரான, கனிஷ்க் சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளாராம், ராகுல். இதிலிருந்து தமிழக காங்., தலைவர் அழகிரி மீது, ராகுலுக்கு நம்பிக்கையில்லை என தெரிகிறது என பேச ஆரம்பித்துவிட்டது, அழகிரியின் எதிர் கோஷ்டி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
01-ஆக-202018:54:00 IST Report Abuse
Endrum Indian பிரச்னை கிளப்பும் புத்தகம்???அப்போ சுடலை மாயாண்டி இந்த புத்தகம் வெளியிடக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபடுவாறே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X