புதுடில்லி: உலகளாவிய தொற்றான கொரோனாவை எதிர்த்து, இந்தியர்கள் தைரியத்துடன் போராடி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மும்பை, கோல்கட்டா, நொய்டா நகரங்களில் அமைக்கப்பட்ட அதிநவீன கொரோனா ஆய்வகங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். இதன் மூலம் சோதனை திறனை அதிகரிக்கவும், நோயை ஆரம்பத்தில் கண்டுபிடிக்கவும் உதவும். தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். கொரோனா முடிந்த பின்னர் காசநோய், டெங்கு ஆகியவற்றிற்கும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவாக உள்ளது. உயிரிழப்பு வகிதமும், மற்ற நாடுகளை விட குறைவாக உள்ளது. உலகளாவிய தொற்றான கொரோனாவை எதிர்த்து, இந்தியர்கள் தைரியத்துடன் போராடி வருகின்றனர். உயர் பரிசோதனை மையங்கள் மூலம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மாநிலங்கள் தொற்றை எதிர்த்து வலிமையுடன் போராடும் . டில்லி, மும்பை, , கோல்கட்டா நகரங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கு முக்கியப்புள்ளியாக உள்ளன. கொரோனா தடுப்பு கவச உடை தயாரிப்பில், இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

இந்த ஆய்வகம், கொரோனாவுக்கு மட்டுமல்லாமல் வருங்காலங்களில் ஹெபாடிடீஸ் பி மற்றும் சி, எச்ஐவி, டெங்கு உள்ளிட்ட நோய்களை கண்டறியவும் பரிசோதனை செய்யப்படும். இன்று இந்தியாவில் 11 ஆயிரம் கொரோனா மையங்கள் உள்ளன. 11 லட்சம் தனிமைபடுத்தப்பட்ட படுக்கைகள் உள்ளன. 1,300 ஆய்வகங்களில் தினசரி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE