ராஜஸ்தான் சட்டசபையை கூட்ட கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா ஒப்புதல்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Rajasthan Political Crisis, Kalraj Mishra, Ashok Gehlot, Governor,ஆளுநர்,கவர்னர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையை 21 நாட்கள் கால அவகாசம் அளித்து கூட்டலாம் என மாநில அரசுக்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ராஜஸ்தானில், சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைப்பதன் வாயிலாக, எம்.எல்.ஏ.,க்கள் அணி தாவுவதை தடுக்க, முதல்வர் அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, பல்வேறு முக்கிய பிரச்னைகளை விவாதிப்பதற்கு, வரும், 31ம் தேதி சட்டசபையை கூட்டும்படி, கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம், மாநில அரசு சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டசபையை கூட்டுவதை பற்றி எதுவும் தெரிவிக்காமல், கவர்னர் மவுனமாக இருந்ததால், அரசியல் குழப்பம் நீடித்தது.


latest tamil news


அசோக் கெலாட் அனுப்பிய இரு கடிதத்தையும் கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா திருப்பி அனுப்பிய நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கெலாட், பிரதமர் மோடியுடன் தான் பேசியதாகவும், கவர்னரின் நடவடிக்கை குறித்து தான் முறையிட்டதாகவும், கூறினார். இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபையை கூட்ட பரிந்துரைத்த அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா ஒப்புதல் கொடுத்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கவர்னர், சட்டசபை கூட்டத்தை நடத்தக்கூடாது என்பது தனது நோக்கமல்ல என விளக்கம் அளித்துள்ளார். எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க 21 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அவர், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் பட்சத்தில், அதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூலை-202020:43:22 IST Report Abuse
தமிழ்வேல் அது எதுக்கு 21 நாள் ? முதல்வர் சொல்றாப்போல செய்திடக் கூடாதுன்னா ? அல்லது சாணக்கியருக்கு மேலும் நேரம் தேவைப்படுதா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X